"அந்த போலீஸ்காரர்.. இப்போ.. இங்கே வந்தாகணும்".. ராத்திரி நேரத்தில் பஸ் ஸ்டாண்டை தெறிக்க விட்ட திவ்யா
தேனி பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்
தேனி: தன் செல்போனை ஒரு போலீஸ்காரர் வாங்கி சென்றுவிட்டதால், அந்த செல்போனை தன்னிடமே திரும்ப தர வேண்டும் என்றும் இளம்பெண் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை தந்துவிட்டது.
தேனி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி.. இவருக்கு 29 வயதாகிறது.. டிக்டாக்கில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஏராளமான டிக்டாக் வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில்தான், டிக்டாக் ஆப்பை தடை செய்தனர்.. எனினும், சுகந்தியின் அந்த டிக்டாக் வீடியோக்களை தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் டவுன்லோடு செய்து, அதை ஆபாசமாக சித்தரித்து, மறுபடியும் சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுகந்தியின் குடும்பத்தை பற்றியும் அவதூறாக அதில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு திவ்யாவுக்கு சிலர் உதவியதாகவும் இருந்துள்ளனர்.. இந்த வீடியோக்களை கண்ட சுகந்தி அதிர்ச்சி அடைந்து, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.
போலீசாரும் அந்த புகாரின்பேரில் விசாரணை செய்து, அதன்பேரில் திவ்யா 26, மணிகண்டன், ரமேஷ், அழகர்ராஜா, செல்வா ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு சம்பந்தமாக திவ்யாவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணையும் நடத்தினர்.. பிறகு திவ்யாவை சொந்த ஜாமீனில் விடுவித்துவிட்டனர்.
இந்நிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த திவ்யா, அன்றைய தினம் இரவே தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்... போலீசார் தன்னுடைய செல்போனை வாங்கிக் கொண்டு போய் திருப்பி தர மறுப்பதாகவும், அந்த போனை தன்னிடம் தர வேண்டும் என்றும் சொல்லி முழக்கமிட்டார்..
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீசார் அங்கு விரைந்து வந்து திவ்யாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரை கண்டித்து இளம்பெண் திவ்யா போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை தந்துவிட்டது. (இந்த திவ்யாதான், தன் காதலன் கார்த்திக்கை தேடி டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு அலப்பறையை தந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications