தேனியில் கடத்தப்பட்ட 30 நாள் குழந்தை, பால் கேனில் இருந்து சடலமாக மீட்பு.. கதறி அழுத இன்ஸ்பெக்டர்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே காணாமல் போன 30 நாள் குழந்தை, வீட்டில் உள்ள பால் கேனில் சடலமாக மீட்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அந்த வழியாக சென்ற குடுகுடுப்பைகாரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் இன்ஸ்பெக்டர் கதறி அழுத காட்சி வெளியாகி உள்ளது.
கேரளாவில் ஏலத்தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்கள் சௌந்தரவேல் - பாண்டீஸ்வரி தம்பதியினர். இவர்கள் தேனி மாவட்டம் கம்பம் கிராம சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களது மகள் சினேகா என்பவருக்கும் போடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதி போடியில் வசித்து வருகிறார்கள்.

சினேகா வளைகாப்பு முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இரண்டு மாதம் முன்பு தனது தாய் வீடான கம்பம் கிராமசவாடி பகுதிக்கு வந்தார். சினேகாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர் கேரளாவில் தோட்ட வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.
சினேகா தனது குழந்தையுடன் தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை காலை சினேகா, தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு குளிப்பதற்காக சென்றிருக்கிறார். பாட்டி அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டார்.
குளித்து முடித்துவிட்டு சினேகா திரும்பி வந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தை இல்லை. இதனை கண்டுஅதிர்ச்சி அடைந்து தேடி பார்த்துள்ளார். கடைக்குச் சென்று திரும்பிய பாட்டியும் குழந்தையை எடுத்துச் செல்லவில்லை எனத் தெரிந்ததும் குழந்தையை காணாத சினேகா சுற்றி முற்றி தேடி பார்த்துவிட்டு, கதறி அழுதபடி வந்து தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து உடனடியாக உத்தமபாளையம் டிஎஸ்பி மதுக்குமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி மதுக்குமாரி, கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா ஆகியோர் விரைந்து வந்து குழந்தையை தேடி பார்த்தார்கள். ஒரு பக்கம் சினேகாவின் உறவினர்களும் குழந்தையை தேடும் பணியை தீவிரமாக செய்தனர,
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கடைசியாக குடுகுடுப்பைக்காரர் கடந்து சென்றது தெரியவந்தது. அவரை கம்பத்தில் எங்கு இருக்கிறார் என்று தீவிரமாக தேடி பிடித்து விசாரிக்க தொடங்கினர். அதேநேரம் வீட்டில் குழந்தை எங்காவது மறைத்துவைக்கப்பட்டுள்ளதா என்று தீவிரமாக காவலர்கள் தேடினர். அப்போது காவலர்கள் சினேகாவின் வீட்டில் இருந்த பால் கேன் ஒன்றில் குழந்தை கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
இதையடுத்து அதிலிருந்து குழந்தையை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள்குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை வீட்டில் இருந்த பால்கேனிற்கு வந்தது எப்படி? குழந்தையை கடத்தியவர்கள் யார்? குழந்தை இறப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
சினேகாவின் குடும்பத்தினர் அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதோடு, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குழந்தை கடத்தப்பட்ட நேரத்தில் அந்த வழியாக கடந்து சென்ற குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சினோகா குடும்பத்தினர், மற்றும் குடுகுப்பைகாரரிடம் நடந்து வரும் விசாரணை முடிந்த பின்னரே குழந்தை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை உயிருடன் மீட்க முடியாததால் காவல் ஆய்வாளர் லாவண்யா கதறி அழுதார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications