உடல் முழுவதும் காயங்களுடன் கல்லூரி மாணவர் மர்மச் சாவு.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
Recommended Video
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டியை அடுத்த ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திர பிரசாத் (18). இவர் ஈரோடு வெங்கடேஸ்வரா கல்லூரியில் முதலாம் ஆண்டு சென்று வந்துள்ளார்.
கல்லூரி விடுமுறை என்பதால் ஜக்கம்பட்டிக்கு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சினிமாவிற்கு செல்வதாக கூறி 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நேற்று திங்கள்கிழமை வரை அவர் வீடு திரும்பவில்லை.

தகவல்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பெற்றோர்கள் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஜக்கம்பட்டி ராயல்பள்ளி பின்புறம் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உறுதி
நாகேந்திர பிரசாத்தை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரது பெற்றோரை அழைத்து சென்று அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர்களும் இறந்தது நாகேந்திர பிரசாத்தான் என உறுதி செய்தனர்.

பலத்த காயம்
இறந்த சடலத்தை மோப்ப நாய் வைத்து சோதித்ததில் சிறிது தூரம் ஓடி நின்றது. மருத்துவர்கள் சோதனையில் தலை, கை, கன்னம், மார்பு பகுதியில் பலத்த காயம் இருப்பதை கண்டறிந்தனர்.

பெரும் பரபரப்பு
இதனைத் தொடர்ந்து நாகேந்திர பிரசாத் உடல்களில் பலத்த காயங்கள் இருப்பதால் கொலையா தற்கொலையா என ஆண்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications