தேனியில் உல்லாசமாக இருக்க பெண் தேடிய கலெக்டர் அலுவலக ஊழியர்.. கனவிலும் மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தேனியில் உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் உல்லாசமாக இருக்க பெண்கள் இருக்கிறார்களா என்று அந்த பகுதியில் உள்ள 4 பேரிடம் கேட்டிருக்கிறார்.. அப்படி கேட்டவருக்கு பெண் இருப்பதாக அழைத்து சென்ற சிறுவர்கள் உள்பட 4 பேர், அவர் எப்போதுமே மறக்க முடியாத அளவிற்கு சம்பவம் செய்திருக்கிறார்கள்..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று அவர் தனது உறவினரை பார்க்க தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டிக்கு வந்துள்ளார். நள்ளிரவில் பழனிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்றிருக்கிறார்.

theni money

அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று, அப்பகுதியில் உல்லாசமாக இருக்க பெண்கள் யாரும் இருக்கிறார்களா? என்று கேட்டிருந்தாராம். அப்போது அந்த நான்கு பேரும் யோசித்து விட்டு, அவரிடம் பெண்கள் இருப்பதாகவும், தாங்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறி அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் போகும் வழியில், அதற்கு முன்னதாக அந்த நபர்கள் தங்களுக்கும் மது வாங்கிக் கொடுக்குமாறு நிபந்தனை விதித்தார்களாம். இதையடுத்து அவர் அந்த நபர்களுக்கு மதுவாங்கிக் கொடுத்திருக்கிறாராம். அவர்கள் அனைவரும் ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.. அப்போது அந்த நான்கு பேரும், கலெக்டர் அலுவலக ஒப்பந்த ஊழியரின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலி, அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், மிரட்டிவிடடு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தனது நகை, பணம், செல்போன் பறிக்கப்பட்டதால் ஆடிப்போன தேனி கலெக்டர் அலுவலக ஒப்பந்த ஊழியர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் நேரில் சென்று உடனடியாக புகார் செய்தார். அந்த புகாரில் நடந்த விவரங்களை குறிப்பிட்டு, தனது பொருட்களை மீட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருபவரிடம் பணம், நகை, செல்போன் பறித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் 17 வயது சிறுவன், 20 வயது வாலிபர்கள் 2 பேர் என 3 பேரை தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+