கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தமிழக அரசு நிலம் கொடுக்க மறுப்பு! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
தேனி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்ட தமிழக அரசு நிலம் கொடுக்க மறுப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்களுடன் கலந்துரையாடிய போது இதனைக் கூறினார்.

மத்திய அரசுப் பள்ளிகள் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பது தான் தங்களின் ஆசை என்றும் ஆனால் அதற்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு தருவதில்லை எனவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். கே.வி. பள்ளிகள் கட்டுவதற்குரிய இடத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை என சாடினார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை பொறுத்தவரை குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதால் அந்தப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 10 சீட் என்ற கோட்டா இருந்தவரை அவர்கள் மூலம் கே.வி. பள்ளிகளில் பிள்ளைகளுக்கு சீட் வாங்க பலரும் போட்டி போடுவார்கள்.
இதனிடையே இப்போது கே.வி.பள்ளிகளில் சேர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை கடிதம் ஏற்கப்படாது என்ற திருத்தம் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1ஆம் வகுப்பில் சேர்த்துவிட்டால் 12ஆம் வகுப்பு முடித்து வெளியே வரும் வரை கல்விக்காக ஆகும் கட்டணச் செலவு தனியார் பள்ளிகளை காட்டிலும் மிகக் குறைவு தான்.












Click it and Unblock the Notifications