தயவு செஞ்சு உங்க தகுதிக்கும் மீறி யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க.. காசை திரும்ப பெற என்ன வழி?
தேனி: கடன் வாங்கி கொண்டு திரும்ப தர மறுக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. எந்த உத்தரவாதமும் இன்றி பணத்தை கடன் கொடுத்தவர்கள் திரும்ப பெற முடியாத நிலை இருக்கிறது. உண்மையில் கடன் கொடுத்தவர்களுக்கு சட்ட ரீதியாக உள்ள பாதுகாப்புகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேனி, திண்டுக்கல்,மதுரை பக்கம் பல ஆண்டுகளாக உள்ள ஒரு பழக்கம் என்னவென்றால், இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்து சம்பாதிப்பது தான். மற்ற ஊர்களிலும் இந்த பழக்கம் அதிகமாக இருக்கிறது என்றால், தேனி மதுரை பக்கம் இதை குறிப்பிட காரணம் கடன் வாங்கியவர்களை போல், கடன் கொடுத்தவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யார் யாரோ புதுசு புதுசாக வந்து மோசடி செய்வது ஒருபுறம் எனில், கடன் மோசடியும் அவர்களை கலங்க வைத்துள்ளது. சிறுக சிறுக உழைத்து சம்பாதித்த பணத்தில் வீடு வாங்காமல், இடம் வாங்காமல், தங்கம் வாங்காமல் கடன் கொடுத்து அந்த வட்டி மூலம் சம்பாதித்து பணத்தை மேலும் பெருக்கலாம் என்று ஆசைப்பட்ட பலர் இன்று அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளார்கள்.
ஒரு வகை மக்கள் கந்துவட்டி தொழில் செய்கிறார்.. இன்னொரு வகை மக்கள் ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்கிறார், இன்னொரு வகை மக்கள் விவசாயம் பிரதானம் என்றாலும் சம்பாதித்த பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். இவர்கள் ஊருக்குள் பெரிய அளவில் வீடு , நல்ல பைக் அல்லது கார் என பந்தாவாக வலம் வருகிறார்கள். இவர்கள் பலருக்கும் கடன் கொடுக்கும் தொழிலை எப்படி செய்கிறார்கள என்றால், அப்பாவி ஏழைகளிடம் வட்டிக்கு விட்டால் அதிக பணம் கிடைக்கும்.
என்னிடம் 2 லட்சம், ஒரு லட்சம் என எவ்வளவோ, அந்த பணத்தை என்னிடம் கொடுங்கள், மாதம் மாதம் சரியாக வட்டி கொடுக்கிறேன் என்பார்கள்.. அதையும் உண்மை என்று நம்பி பணம் புரோ நோட்டு எனப்படும் உண்டியல் சீட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு கடன் கொடுப்பார்கள்.. அது தான் அதிகபட்சமான உத்தரவாதம் ஆக இருக்கும்.
பணம் வாங்கியவர் மாதம் மாதம் வட்டியாக சரியாக சில காலம் கொடுப்பார். அதை பார்க்கும் மக்கள் இன்னும் கூடுதல் பணத்தை வட்டிக்கு கொடுப்பார்கள். தெரிந்தவர்களுக்கும் சிபாரிசு செய்வார்கள்.. அவர்களும் வட்டிக்கு பணம் கொடுப்பார்கள்., இப்படி கொடுத்த பணத்தை எல்லாம் மொத்தமாக அவர்களது மனைவி அல்லது மகன் பெயரில் அல்லது மாமானார், மாமியார் பெயரில் சொத்துக்களை வாங்குவார்கள்.. பின்னாளில் மொத்தமாக பணத்தை திரும்ப தராமல் தலைமறைவு ஆகிவிடுவார். அதேபோல் வங்கியிலும் வீட்டை அடமானம் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகி இருப்பார். இல்லாவிட்டால் வங்கிக்கு பதில்வேறு ஒருவருக்கு வீட்டை விற்றுவிட்டு எஸ்கேப் ஆகி இருப்பார்.
இல்லாவிட்டால் தொழிலில் நஷ்டம் ஆகிவிட்டது. என்னிடம் பணமே இல்லை என்று சாதிப்பார்கள்.. என்னால் பணத்தை கட்ட முடியாது.. நான் திவால் ஆகிவிட்டேன் என்று அறிவிப்பார்கள்.. இப்படியான சூழலை பணத்தை திரும்ப வாங்குவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.. ஒருவருக்கு கடன் தர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிடுங்கள்.உங்கள் சொந்தம், பந்தம், நட்புகள் என யாராக இருந்தாலும் 5000, 10000 என திரும்ப தராவிட்டாலும் தாங்க முடியும் என்ற நிலை இருந்தால் கொடுங்கள்..
மற்றபடி பெரிய அளவில் பணதை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.. ஒருவருக்கு பணம் வேண்டும் என்றால், அவர் வங்கியில் போய் வாங்கலாம். வங்கிகள் நிறைய உத்தரவாதம் இருந்தால் தான் தரும். வங்கிகள் சட்ட ரீதியாக போராடி வசூலிக்கும் வல்லமை உடையவை.. அவர்களே பணத்தை திரும்ப வசூலிக்க படாதபாடு படுகிறார்கள். கடன் கொடுப்பது உங்கள் வேலை இல்லை.. தகுதி இருந்தால் வங்கிகளே தராளமாக கடன் கொடுக்கும்.. எனவே மறந்தும் யாருக்கும் கடன் தராதீர்கள் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்..
அதையும் மீறி கடன் தந்துதான் ஆக வேண்டும் என்றால், சொத்தை கிரையம் முடியுங்கள். அவர்பெயரில் உள்ள சொத்தை உங்கள் பெயருக்கு மாற்றித்தர கேளுங்கள்.. குறிப்பிட்ட நாளில் கடனை கட்டாமல் சொத்து உங்களுக்கு வந்துவிடும். இதுதான் ஒரே வழி. உணர்வுகள் அடிப்படையிலோ அல்லது நட்பின் அடிப்படையிலோ கடன் யாருக்கும் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் வாழ்நாள் முழுவதும் வலியை தரும் நிகழ்வுகள் நடந்துவிடும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications