உச்சக்கட்ட ஆத்திரத்தில் அருந்ததியர்கள்.. தொடர்ந்து எரிபடும் சீமான் பொம்மைகள்! இன்று பழனியில் சம்பவம்

அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கலில் அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

தேனி: அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து இருக்கும் நிலையில், திண்டுக்கலில் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது

சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மேனகா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சியினர் இதற்காக அந்த தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்ற பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 முதலியார்கள் பற்றி பேச்சு

முதலியார்கள் பற்றி பேச்சு

ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கும் சீமான், கூட்டத்தில் அந்த சமுதாயத்தினரை பாராட்டி பேசினார். "விஜயநகர அரசர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து கேட்டார்கள். ஆனால் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்." என்றார்.

 அருந்ததியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு

அருந்ததியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு

அதே மேடையில் சீமான் பேசுகையில், "என் ஆதி தமிழ் குடிகள் கடைசியாக இந்த நிலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். எங்கள் ஆட்சியிலும் நீங்கள் இதேபோல் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது வேறு ஆளை பாருங்கள்! என்று சொல்லிவிட்டார்கள். எனவே ஆதிக்குடிகளை வேறு வழியில்லாமல் கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள்." என்று கூறினார்.

 அருந்ததியின மக்கள் எதிர்ப்பு

அருந்ததியின மக்கள் எதிர்ப்பு

சீமானின் அருந்ததியர்கள் குறித்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தங்களை சீமான் அவமதித்துவிட்டதாக அருந்ததியர் அமைப்புகளும் குற்றம்சாட்டி உள்ளனர். கடந்த 17 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியிர் ஈரோடு ராஜாஜிபுரத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது அருந்ததியின மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

மலம் அள்ளுபவர்களா?

இந்த நிலையில் நேற்றும் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியிர் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சீமான் அருந்ததியர்கள் மலம் அள்ளுபவர்கள் என்று மேடையில் பேசுகிறார். நீங்கள் ஏன் அருந்ததியர் பகுதிக்கு வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய மக்கள் இங்கு இருக்கும் 35,000 பேர் அனைவரும் கொதிப்படைந்து உள்ளோம். என்றனர்.

 சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்

ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் அருந்ததியர்கள் என்றார் சீமான். அவர் மன்னிப்பு கேட்காமல் அருந்ததி மக்கள் வசிக்கும் பகுதிக்கு உங்களால் ஓட்டு கேட்க செல்ல முடியாது என்று கூறி அனுமதி மறுத்த மக்கள், நாங்கள் மலம் அள்ள ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று சீமான் சொன்னதற்கான ஆதாரத்தை கேட்டனர். தங்களுக்கு சீமான் பேச்சால் அவமானமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

 உருவ பொம்மை எரிப்பு

உருவ பொம்மை எரிப்பு

இதற்கிடையே நேற்று தேனியில் சீமானை கண்டித்து அவரது உருவ பொம்மையை தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட பழனியில் சீமானின் உருவ பொம்மையை எரித்து தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+