தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா.. ஐயப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயம்
தேனி : கார்த்திகை பிறந்துவிட்டது. பலரும் சபரிமலைக்கு விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க பயணிப்பார்கள்.. ஐயப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்ல பொதுவாக மூன்று வழிகள் உள்ளன. குற்றாலம், செங்கோட்டை வழியாக பத்தினம் திட்டா மாவட்டத்திற்குள் நுழைந்து அப்படியே சபரிமலை போகலாம். இதேபோல் கோவை வழியாக கேரளாவிற்குள் நுழைந்து கோட்டயம் வழியாக குமுளி நோக்கி பயணித்து சபரிமலைக்கு போகலாம். மூன்றாவது வழி, தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் நேரடியாக தேனி வந்து அங்கிருந்து குமுளி வழியாக சபரிமலை போக முடியும்.

இதில் மூன்றாவதாக சொன்ன தேனி வழியாகவே தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் சபரிமலைக்கு போவார்கள்.
ஆனால் மிக எளிதான வழி என்றால், அது திண்டுக்கல், தேனி, குமுளி வழியாக செல்வதே வெளிமாநிலத்தவருக்கும், சென்னை மக்களுக்கும் எளிதானது. தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா,கர்நாடகா தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதி மக்களும் சபரிமலைக்கு செல்கிறார்கள்.
சபரிமலைக்கு செல்வோர் கவனிக்க வேண்டிய முதல் விஷயம்: தேனி வழியாக சபரிமலைக்கு செல்வோர், கம்பத்தில் இருந்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியதிருக்கும்.தேனியை அடுத்து கம்பம், கம்பம் மெட்டு, அதன்பிறகு குமுளியை அடைந்து வண்டிப் பெரியார், அதன்பிறகு எரிமேலி செல்ல முடியும். சபரிமலை தரிசனம் முடிந்து வரும் போது, நேரடியாக குமுளி வழியாக கம்பம் தேனியை அடைந்து போக வேண்டி ஊருக்கு போகலாம்.
இரண்டாவது விஷயம்: சபரிமலை செல்வோர் தேனி மாவட்டத்தில் சில கோயில்கள் உள்ளன. அங்கு 24 மணி நேரமும் தங்கி கொள்ள முடியும். ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடரலாம். பாதயாத்திரை செல்வோருக்கு பல்வேறு இடங்களில் தங்க வசதிகள் உள்ளன.
மூன்றாவது விஷயம்: சபரிமலை செல்ல பலரும் வேன், கார், பஸ் பிடித்து செல்வார்கள். இந்த முறை தேனிக்கு நேரடியாக ரயில் உள்ளது. எனவே ரயிலில் பயணித்து தேனி வந்து அங்கிருந்து எளிதாக ஒரே பேருந்தில் சில மணி நேரத்தில் சபரிமலையை அடைய முடியும். சென்னை டூ தேனிக்கு 390 ரூபாய் தான் டிக்கெட், நேரடியாக அங்கிருந்து 150 முதல் 200 ரூபாயில் சபரிமலையை அடைய முடியும்.
சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு தேனி வழியாக வரும் போது, வரும் வழியில் வாகமன், தேக்கடி, இடுக்கி அணை, சுருளி, மூணாறு போன்றவற்றிருக்கு போக முடியும்.இதேபோல் கொடைக்கானல், பழனிக்கும் போகவும் முடியும். ஆன்மீக யாத்திரிகர்கள் பலர் சபரிமலை போன கையோடு பழனிக்கும் செல்வதும் வழக்கம். அந்த வகையில் பழனி செல்ல குமுளி தேனி வழியாக செல்வதே எளிதாக இருக்கும்.
கார்த்திகை பிறந்துவிட்ட நிலையில், புதிய ரயில் பாதையில் பக்தர்கள் பலர் தேனிக்கு ரயிலில் பயணித்து வருகிறார்கள்.இந்நிலையில் அடுத்த இரு மாதங்களில் தேனி ரயிலை பலரும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனிடையே சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications