மணிமேகலையுடன் கள்ளக்காதல்.. கண்டித்த ராஜேஷ்.. அம்மிக்கல்லை தூக்கி போட்ட மலைச்சாமி.. தேனியில் ஷாக்!
தேனி: மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கள்ளக்காதலன் கொலை செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (45). இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மணிமேகலை (32) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மணிமேகலைக்கு அதே பகுதியில் வசிக்கும் மலைச்சாமி என்பருடன் கடந்த நான்கு வருடங்களாக தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

தென்னந்தோப்பு
இதனை அறிந்த மணிமேகலையின் கணவர் ராஜேஷ் கண்ணன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராஜேஷ் கண்ணனை தீர்த்துக் கட்டுவதற்கு முடிவு செய்தனர். ராஜேஷ் கண்ணனுக்கு கோட்டூர் அருகே தென்னந்தோப்பு உள்ளது.

கொடூர கொலை
தோப்பில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் நேற்று இரவு ராஜேஷ் உறங்கியுள்ளார். கணவன் மாட்டுத் தொழுவத்தில் தனியார் படுத்து கொண்டிருப்பதை மணிமேகலை தனது கள்ளக்காதலன் மலைச்சாமியிடம் சொல்லி உள்ளார். மலைச்சாமியும் , ராஜேஷ் கண்ணன் தோட்டத்தில் உள்ள மாட்டுத் தொழுவில் நன்றாக உறங்குவதை கண்டு அவர் அருகில் உள்ள அம்மிக்கல்லை எடுத்து தலையில் போட்டு மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தீவிர விசாரணை
அதிகாலை தகவலறிந்த காவல்துறையினர் தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்த ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். வீரபாண்டி காவல் ஆய்வாளர் பாலகுரு தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.

கிடுக்கிப்பிடி
விசாரணையில் ராஜேஷ் கண்ணனின் மனைவி மணிமேகலை முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது. விசாரணையில் மணிமேகலை தனது கள்ளக்காதலன் மலைச்சாமி உடன் தனது கணவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டது.

சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து ராஜேஷ் கண்ணனை கொலைசெய்து விட்டு ஊருக்குள் ஒன்றும் தெரியாதது போல் இருந்த மலைச்சாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். காவல் துறையினர் 24 மணி நேரத்திற்குள் கொலைக் குற்றவாளி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications