தேனியில் வச்சு செய்த முதல்வர்.. ஓ.பி.எஸ் மகனுக்காக அதி தீவிர பிரச்சாரம்...14 இடங்களில் பேசினார்!
தேனியில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் மகனுக்காக பிரச்சாரம் செய்தார்.
Recommended Video

சென்னை: அதென்ன முதல்வருக்கு ஓபிஎஸ் மகன் என்றால் மட்டும் ஸ்பெஷல் போல.. தேனியில் மட்டும் ரவுண்டு கட்டி பிரச்சாரம் செய்துள்ளார்.
இந்த முறை திமுகவுக்கு சளைக்காமல் அதிமுகவும் வாரிசுகளை களத்தில் இறக்கி விட்டுள்ளது. இதனால் அவரவர்களின் அப்பாக்கள் மகன்களின் வெற்றிக்காக ரொம்பவே மெனக்கட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகன்களுக்காக, தகப்பன்கள் வேலை பார்ப்பது அவர்களின் கடமை, நிர்ப்பந்தம், அவசியம், கட்டாயம், என எடுத்து கொள்ளலாம். ஆனால் ஓபிஎஸ் மகனுக்காக முதல்வர் எடுத்த சீறிய முயற்சிதான் ஆச்சரியமாக உள்ளது.

அமமுக
துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகசார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சமும் அந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாமல் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறங்கி உள்ளார்.

ஸ்டார் தொகுதி
இதனால்தானோ என்னவோ தேனி தொகுதி ஸ்டார் கேட்டரிக்குள் போய்விட்டது! இவர்களே ஸ்டார் லெவல் என்றால் இவர்களுக்காக பிரச்சாரம் செய்ய போகிறவர்கள் சும்மாவா என்ன? முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்குள் வந்ததில் இருந்து ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஓட்டு கேட்டார். அதாவது மற்ற இடங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் பிரச்சாரம் என்றால் தேனியில் மட்டும் முதல்வர் 14 இடங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறாராம்!

ஈவிகேஎஸ்
இதற்கு முதல் காரணம், ஓபிஎஸ் மகன் என்பதாக இருக்கலாம். அல்லது அமமுக இனி தலைதூக்கக்கூடாது, அவங்க ஸ்ட்டிராங் தொகுதியிலேயே வச்சு, தோற்கடிக்கும் திட்டமாக இருக்கலாம், அல்லது ஈவிகேஎஸ்-ஐ தோற்கத்து திமுகவுக்கு பதிலடி தருவதாகவும் இருக்கலாம். ஆனால் இதே தேனி தொகுதியில்தான் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஈகோ பிரச்சனை வெடித்ததாக முன்பு கிசுகிசுக்கப்பட்டது.

பரமக்குடி
தேனியில் மற்ற சட்டமன்ற தொகுதிகள் இருப்பதாகவே வைத்து கொண்டாலும், அதேபோலதான் ராமநாதபுர பிரச்சாரத்துக்கும் முதல்வர் சென்றார், அங்கேயும்தான் பரமக்குடி சட்டமன்ற தேர்தல்நடக்க போகிறது. ஆனால் முதல்வர் பிரச்சாரம் செய்த இடங்கள் எத்தனை தெரியுமா? வெறும் 3தான்!

பிரதமர்
முதல்வர் பழனிசாமி மட்டுமில்லை.. இனி தேனி வெறும் ஸ்டார் தொகுதியாக இல்லாமல் 5 ஸ்டார் தொகுதியாகவே மாறிவிடும் போல இருக்கிறது. வருகிற 13-ம் தேதி ஓபிஎஸ் மகனுக்காக பிரதமரே வரப்போகிறாராம்!

ராகுல் காந்தி
பிரதமர் வருவதாக இருந்தால் இந்த பக்கம் காங்கிரஸ் சும்மா இருக்குமா? அதனால் 12-ம் தேதியே ராகுல் காந்தியை ஆண்டிப்பட்டிக்கு வரவழைக்க போகிறார்கள் ஈவிகேஎஸ்ஸுக்கு வாக்கு திரட்ட! ஆக.. தேனி தொகுதி வேற லெவலுக்கு போக போகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications