சட்டென காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்... உசிலம்பட்டியில் நடந்தது என்ன?
மதுரை: சாலை மார்க்கமாக தேனியில் நடைபெறும் விழாவிற்கு மதுரையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென காரை நிறுத்தி உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தேனியில் நாளை நடைபெற இருக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவடைந்த அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பையும், உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
— M.K.Stalin (@mkstalin) April 29, 2022
இந்த ஆய்வுகளில் பெறப்பட்டுள்ள உள்ளீடுகள் அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கையில் எதிரொலிக்கும்! pic.twitter.com/phU9yrgZKu
மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிளையும் வழங்க இருக்கிறார்.

தேனி, திண்டுக்கலில் அரசு விழா
தேனி அன்னஞ்சி பிரிவு அருகே பைபாஸ் சாலையில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. அதேபோல் மாலை திண்டுக்கலில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கும் அவர் ரூ.300 கோடி மதிப்பில் முடிவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

தேனி பயணம்
இந்த நிலையில் விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 5:30 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உசிலம்பட்டி வழியாக தேனிக்கு பயணித்தார்.

தீயணைப்பு அலுவலகத்தில் ஆய்வு
இதனிடையே கான்வாய் உசிலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்ன முதலமைச்சர், அங்குள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, பணியில் இருந்த முத்தழகு என்ற தீயணைப்பு வீரரிடம் "தீயணைப்பு நிலையத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர். மற்றும் குறைகள் ஏதும் உண்டா?" என கேட்டறிந்ததுடன் கோப்புகளை பார்வையிட்டார்.

தேனியில் தங்கும் முதலமைச்சர்
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவும் உடன் இருந்தார். அலுவலக கட்டிடம் சைலேந்திர பாபுவால் திறந்து வைக்கப்பட்டது என்பதால் அங்குள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்துவிட்டு முதலமைச்சருடன் அவர் தேனி நோக்கி சென்றார். தேனியில் இரவு தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரசு விழாக்களில் பங்கேற்று ரூ.300 கோடி மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications