தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனியில் இன்று இரவு ரூ.5000 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டம்.. டிஜிபியிடம் காங்கிரஸ் பகீர் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: தேனியில் இன்று இரவு வாக்காளர்களுக்கு ரூ.5000 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தேனி மக்களவை தொகுதி உள்பட தமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளுக்கு(வேலூர் தவிர) நாளை தேர்தல் நடக்க உள்ளது.

congress complaint against theni aiadmk candidate raveendranath kumar

தேனியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வனும் போட்டியிடுகிறார்கள்.

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று இரவு ரூ.5000 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேலும் நாளை தேர்தல் நடைபெறும் போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அதிமுகவில் பணத்தை என்ன கொட்டியா வைச்சிருக்கோம்... அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்கிறார்அதிமுகவில் பணத்தை என்ன கொட்டியா வைச்சிருக்கோம்... அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்கிறார்

இது தொடர்பாக தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம், காங்கிரஸ் மாநில துணை தலைவர் தாமோதரன் தலைமையில் காங்கிரஸ் பிரநிதிதிகள் இன்று புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் தர்மபுரி பாமக வேட்பாளர் அன்புமணி மீதும் புகார் அளித்துள்ளனர். வாக்குசாவடிகளில் தங்கள் ஆதரவாளர்கள் மட்டுமே இருப்பார்கள் என அன்புமணி பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வ்லியுறுத்தி உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

English summary
congress complaint against theni aiadmk candidate raveendranath kumar for money distribution to voter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X