Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடையில் எவ்வளவு தான் டெக்னாலஜி வந்தாலும்.. மாறாத காட்சிகள்.. புலம்பும் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

தேனி: ரேஷன் கடையில் தராசுடன், பில்போடும் கருவி இணைக்கப்பட்டுள்ளதால் பொருட்கள் வினியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. சரியான எடைக்கு பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் வைத்தாக வேண்டும். எடை குறைந்தாலும் சிக்கல், கூடினாலும் சிக்கல் என்ற நிலை உள்ளதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் 35,296 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 2.19 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக புகார்கள் அதிகரித்தது. மேலும் அடிக்கடி இணையதளம் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகைகளை பதிவு செய்ய முடியாமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

delay in distribution of goods due to connection of scale to billing POS device at ration shop

இதனை தடுக்க தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் தற்போது எலக்ட்ரானிக் தராசுகள் POS மெஷினுடன் இணைக்கப்பட்டு, எடைபோடும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ரேஷன் கடையில் தராசுடன், பில்போடும் கருவி இணைக்கப்பட்டுள்ளதால், பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சரியான எடையில் வழங்கும் நோக்கத்துடன் அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

எப்படி உணவுப் பொருட்கள் வழங்கப்படும் தராசு இணைக்கப்படுகிறது

ரேஷன் கடைகளில் தற்போது எலக்ட்ரானிக் தராசு வைக்கப்பட்டுள்ளது. இந்த எடைபோடும் எலக்ட்ரானிக் தராசுகள், POS கருவியுடன் புளூடூத் மூலம் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், பில் போடும் போது எடையை தானாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், எடை குறைவு போன்ற புகார்களை தவிர்க்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது, ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், மக்களுக்கு சரியான எடையில் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும் என்று அரசு அறிமுகம் செய்துள்ளது.

மென்பொருள் எப்படி இருக்கும்

இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறும் போது, ரேஷன் கடைகளில் பில்போடும் கருவியான பி.ஓ.எஸ். மின்னணு எந்திரத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

தற்போது மின்னணு எடை தராசும், பி.ஓ.எஸ். கருவியும், 'வைபை' மற்றும் 'புளூடூத்' மூலமாக இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரேஷன் ஊழியர், தராசில் எவ்வளவு பொருள் வைக்கிறாரோ, அந்த எடை தான் பி.ஓ.எஸ். கருவியில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் அரிசி, சீனி, பருப்பு என ஒவ்வொரு பொருட்களுக்கும் பி.ஓ.எஸ். கருவியில் காட்டப்படும் அளவு எடை இருந்தால் மட்டுமே வினியோகம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எடை குறைந்தால் சிக்கல்

எனவே சரியான எடைக்கு பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் வைத்தாக வேண்டும். எடை குறைந்தாலும் சிக்கல், கூடினாலும் சிக்கல் என்ற நிலை உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு எடை குறைவு என்ற பிரச்சினை வராது. தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் காலதாமதமின்றி ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். அதேநேரம் எடை சரியாக வருவதற்காக மெனக்கெட வேண்டியுள்ளதால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி செல்ல காலதாமதம் ஏற்படுகிறது என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+