தேனிக்கு வந்த மர்ம மனிதன் யார்? பழைய பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்.. திண்டுக்கல் ஐசியூவில் நர்சிங் மாணவி
தேனி: தேனியில் நர்சிங் மாணவிக்கு நடந்த கொடுமை, மிகப்பெரிய அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தேனி, திண்டுக்கல் என இரு மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் துரிதமான விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது மாணவிக்கு?
தேனி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.. இந்த மாணவி, நேற்று காலை தன்னுடைய ஊரில் இருந்து தேனிக்கு பஸ்சில் வந்துள்ளார்.

பதற்றம்: அப்போது மாணவியை பின்னாடியே ஒருவர் ஃபாலோ செய்து வந்துள்ளார்.. தன்னை ஒருவர் பின்தொடர்வதை அறிந்துகொண்ட மாணவி பதற்றமடைந்து, உடனடியாக தன்னுடைய அப்பாவுக்கு, செல்போன் மூலம் தகவல் தந்துள்ளார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே மாணவியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.. இதனால் பதறிப்போன மாணவியின் அப்பா, உடனடியாக தேனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. போலீசாரும் இந்த புகாரின்பேரில், மாணவியை தேட ஆரம்பித்தனர்.
தேனி பஸ் ஸ்டாண்டு: எனினும், அதற்குள் மாணவி கடத்தப்பட்டுவிட்டார்.. தேனி பழைய பஸ் ஸ்டாண்டு அருகே மர்ம நபர்கள், மாணவியை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்.. பிறகு மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே இறக்கி விட்டு தப்பி சென்றதாகவும் தெரிகிறது.. இதையடுத்து, அதிர்ச்சியிலிருந்த மாணவி, அங்கிருந்த ரயில் நிலைய பாதுகாப்பு பணி போலீசாரிடம் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
மாணவியின் நிலைமையை கண்டு பதறிய, திண்டுக்கல் மகளிர் போலீசார், உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. இதையடுத்து, மாவட்ட எஸ்பி பிரதீப், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.. பாதிக்கப்பட்ட மாணவியிடம் 1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையை மேற்கொண்டனர்.
ஐசியூவில் மாணவி: நடந்த சம்பவம் குறித்து மாணவி சொல்லிக் கொண்டிருந்தபோதே, திடீரென மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், ஐசியூவில் அவரை அனுமத்து, சிகிச்சையும் ஆரம்பமாகியிருக்கிறது.
இந்த சிகிச்சை முடிந்த பிறகுதான், கூட்டு பலாத்காரம் தொடர்பாக மாணவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மகளிர் ஸ்டேஷனில் பிஎன்எஸ் பிரிவு 70(1)ன்படி கூட்டுப் பலாத்கார குற்றம், பிஎன்எஸ்-87 பிரிவின்படி சட்டவிரோத பாலியல் சம்பவங்களுக்காக பெண் கடத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு: அத்துடன், மாணவி சென்ற இடங்களிலுள்ள செல்போன் டவர், சிசிடிவி கேமரா பதிவுகளையும், திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் தேனி டவுன் காவல்துறையினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்ற இடங்களில் செல்போன் டவர், சிசிடிவி கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மாணவி அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை பரிசோதனைக்காக போலீசார் எடுத்து வந்துள்ளனர்.
தலைமறைவான 8 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது. தற்போது 2 பிரிவின் கீழ் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications