தகாத உறவு, கர்ப்பம்.. புட்டு புட்டு வைத்த டிஎன்ஏ டெஸ்ட்.. மகளை தாயாக்கிய அப்பா.. இவர் ஒரு சாமியாராம்
மகளை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்
தேனி: 17 வயது சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்த வழக்கில், பெற்ற தந்தையே அவரை பாலியல் பலாத்காரம் செய்தது டிஎன்ஏ டெஸ்ட்டில் அம்பலமாகி உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி என்ற கிராமம்.. அந்த கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிரசவத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது... ஆனால் பிரசவம் நடந்த பெண், பார்ப்பதற்கு சிறுமி போல இருக்கவும், அவருக்கு 18 வயது பூர்த்தி ஆகி இருக்குமா? என்ற சந்தேகம் அங்கிருந்த டாக்டர்களுக்கு எழுந்தது..

விசாரணை
இதனிடையே, இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்கு அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து தகவல் பறந்தது. உடனடியாக, குழந்தைகள் நலக்குழுவினர் நேரடியாகவே மருத்துவமனைக்கு சென்று விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது குழந்தை பெற்றெடுத்தது பெண்ணுக்கு, வெறும் 17 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்தது... இதையடுத்து, தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு குழந்தைகள் நலக்குழுவினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்...

கர்ப்பம்
மற்றொருபுறம் சிறுமியிடமும் விசாரணை நடத்தினர்... 22 வயது இளைஞர் ஒருவரை தான் காதலித்ததாகவும், அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் ஆகிவிட்டதாகவும் சிறுமி கூறினார்.. மேலும் அந்த இளைஞர் தன்னுடைய உறவுக்காரர் என்றும் சிறுமி கூறினார்.. சிறுமியின் வாக்குமூலத்தை பெற்ற போலீசாரும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்... இந்த வழக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜெயில்
இதனிடையே, ஜெயிலில் இருந்த இளைஞர், சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருநாள் திடீரென சொன்னார்.. அந்த பெண் கர்ப்பமாவதற்கு தான் காரணமில்லை, வேறு யாராவது காரணமாக இருக்கலாம் என்றும் உறுதியாக கூறினார்... இதனால் போலீசார் குழம்பி போய், மீண்டும் புலன் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், சிறுமியின் அப்பா மீது சந்தேகம் திரும்பியது..

டெஸ்ட்
அந்த அப்பாவுக்கு 45 வயது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. அவரை பற்றி சிறுமியிடம் விசாரித்தபோது, திடீரென உளறி உளறி கொட்டினார் சிறுமி.. முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதில் அளித்ததாகவும் தெரிகிறது.. மறுபடியும் குழம்பிப் போன போலீசார், குழந்தையின் தந்தை யார்? என்பதை கண்டறிய டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதுதான் சரியான வழி என்று முடிவு செய்தனர்.. அதன்படி அந்த இளைஞர், சிறுமியின் அப்பா, மற்றும் பிறந்த ஆண் குழந்தை ஆகியோருக்கு டிஎன்ஏ டெஸ்ட் செய்யப்பட்டது.

டிஎன்ஏ
இதில் சிறுமியின் தந்தையின் டிஎன்ஏவும், குழந்தையின் டிஎன்ஏவும் ஒற்றுப்போனது. இதில் இளைஞரின் டிஎன்ஏ சுத்தமாக வேறுபட்டு இருந்தது... அப்போதுதான், பெற்ற மகளை அவளுடைய அப்பாவே, பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது.. இந்த வழக்கில் சிறுமியின் அப்பாவை தேனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இன்னொரு தகவலும் உண்டு.. மகளை நாசம் செய்த அப்பா, ஒரு சாமியாராம்.. தலையில் சடாமுடி எல்லாம் வைத்திருக்கிறார்..!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications