தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகை அணை நீர் மட்டம் கிடு கிடு உயர்வு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Google Oneindia Tamil News

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள, மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான், வைகை அணையில் தேக்கி வைக்கப்படும்.

Flood warning issued to people living on Vaigai river banks in Tamilnadu

இந்த தண்ணீரின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இவ்வாண்டு, கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

இதன்பிறகும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இவ்வணை இரண்டாம் முறை நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

{document1}

English summary
First Flood warning issued for Vaigai river bed people as reservoir stood at 66 feet once again in the same year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X