தேனியில் கழிவுநீர் கால்வாயில் வீசிய துர்நாற்றம்.. பக்கத்து வீட்டில் இருந்து இப்படி எல்லாமா செய்வாங்க
தேனி: தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த முதியவரான பாஸ்கரன் இவர் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் தெருவில் தனது மனைவி, மகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு முன்பு மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் தெருவில் உள்ள பொதுப்பாதையை ஆக்கிரமித்து மாரிமுத்து தனது வீட்டின் படிக்கட்டுகள் கட்டியதால் இருவருக்கும் பிரச்சனை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் பொதுப் பாதை பிரச்சனை காரணமாக மாரிமுத்து, பாஸ்கரன்ம் வீட்டின் கழிவுநீர் வெளியேறும் வாய்க்காலில் சிமெண்ட் கலவை கொட்டியுள்ளார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
பொதுப்பாதை என்பது எப்போதுமே நிலம் மற்றும் சொத்து வாங்குவோருக்கு சிக்கலாகவே இருக்கிறது. பொதுப்பாதையில் சிலர் அதிகம் ஆக்கிரமித்து விடுவார்கள்.. சிலர் ஏமாற்றப்படுவார்கள்... இதனால் அவர்கள் ஏமாந்த பின்னர் சட்டப்போராட்டத்திலும் சண்டையிலும் இறங்குவார்கள்.. சிலர் அப்போது பொதுப்பாதையை அடைக்க தவறானமுயற்சிகளில் இறங்குவார்கள்.. கடைசியில் அவர்களுக்கே அது வில்லங்கமாக முடியும். ஒரு அடி பாதைக்காக வாழ்க்கையை தொலைத்து சிறையில் பலர் இருக்கிறார்கள். அவசரப்பட்டு கை நீட்டி பல லட்சம் செலவு செய்தவர்களும் இருக்கிறார்கள். தேனியில் வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த முதியவரான பாஸ்கரன் இவர் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் தெருவில் தனது மனைவி, மகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு முன்பு மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் தெருவில் உள்ள பொதுப்பாதையை ஆக்கிரமித்து மாரிமுத்து தனது வீட்டின் படிக்கட்டுகள் கட்டியதால் இருவருக்கும் பிரச்சனை நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில் மாரிமுத்து முன்விரோதம் காரணமாக இரு வீட்டிற்கும் பொது பாதையில் செல்லும் சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் சிமெண்ட் கலவையை ஊற்றி அடைத்துள்ளார். இதனால் முதியவர் பாஸ்கரன் வீட்டில் கழிவுநீர்கள் வெளியேற முடியாமல் வீட்டின் முன்பு தேங்கி துர்நாற்றம் வீசியது இது குறித்து மாரிமுத்துயிடம் பாஸ்கரன் குடும்பத்தினர் கேட்ட போது மாரிமுத்துவின் மனைவி மலர்விழி மற்றும் மகன் விக்னேஷ் ஆகியோர் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முதியவர் பாஸ்கரனின் மருமகன் அல்லிநகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாரிமுத்து அவரது மனைவி மலர்விழி மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தொடர்ந்து தங்களுக்கு வழக்கை வாபஸ் பெற கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
எனவே தங்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்காலை அடைத்து அதைக் கேட்கச் சென்ற தங்களது குடும்பத்தினரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications