உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கொலை.. 48 மணி நேரத்தில் கஞ்சா வியாபாரி என்கவுன்ட்டரில் கொலை!
தேனி: உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கம்பம் வனப்பகுதியில் பொன்வண்ணன் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவரை ரவுண்ட் அப் செய்துள்ளனர். அப்போது காவலர்களை தாக்கிவிட்டு பொன்வண்ணன் தப்பிக்க முயற்சித்த போது, போலீசார் சுட்டதில் அங்கேயே இறந்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் 2 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய போது காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய போது காவலரை கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் போது முத்துக்குமார் உடனிருந்த உறவினர் ராஜாராமும் தாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காயம் காரணமாக ராஜாராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேபோல் காவலர் முத்துக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனாலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை காவலர் முத்துக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின் இன்று காலை பேச்சுவார்த்தைக்கு பின் முத்துக்குமாரின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். இதன்பின் 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் தேடப்பட்டு வந்தார். இவர் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கஞ்சா வியாபாரியான பொன்வண்ணனை போலீசார் ரவுண்ட் அப் செய்துள்ளனர். ஆனால் பொன்வண்ணன் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இதனால் காவல்துறையினர் கஞ்சா வியாபாரியான பொன்வண்ணனை சுட்டதில், அங்கேயே பலியாகி இருக்கிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், போலீசார் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமான என்கவுன்ட்டர் செய்திருப்பது விவாதமாகி உள்ளது.
-
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications