தேனி ரேஷன் கடைகளில் விழுந்த "இலவச பொங்கல் வேட்டி சேலை".. எப்போ கிடைக்கும் தெரியுமா? அரசு குட் நியூஸ்
தேனி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை ஆண்டுதோறும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.. 2026 பொங்கலுக்கும் இந்தத் திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் தேனி மாவட்டத்துக்கு வந்துள்ளது.
தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, கிராமப்புற, நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு குட் நியூஸ்
அந்தவகையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. அந்தவகையில் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகளும், ஏறத்தாழ 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன.
2025ம் ஆண்டிற்காக 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகை - இலவச வேட்டி சேலை
அதுமட்டுமல்ல, இலவச, வேட்டி சேலைகளை ஜனவரி 10ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.. இதையடுத்து, 2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது..
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
அந்தவகையில் தேனி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு தலா சுமார் 3.40 லட்சம் வேட்டி, சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பகுதி தற்போது ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தேனி ரேஷன் கடைகள்
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 542 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 431 முழுநேர கடைகள், 86 பகுதி நேர கடைகள் மற்றும் 29 மகளிர் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 517 ரேஷன் கடைகள் கூட்டுறவு துறையின் கீழ் இயங்குகின்றன. மாவட்டத்தில் NPHH, BHH, AAY வகை ரேஷன் கார்டுகள் சேர்த்து சுமார் 4.32 லட்சம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேனியில் பொங்கல் சேலை, வேட்டிகள்
வழக்கம்போல இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தகுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் தகுதியான பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த விவரங்களை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அதன்படி, தேனி மாவட்டத்திற்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 581 சேலைகளும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 773 வேட்டிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 80 சதவீத அளவில், சுமார் 3.26 லட்சம் சேலைகளும், 3.25 லட்சம் வேட்டிகளும் மாவட்டத்திற்கு வந்தடைந்துள்ளன.
தேனி மக்களுக்கு சந்தோஷம்
இந்த சேலை, வேட்டிகள் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி மற்றும் உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வழங்க வேண்டிய பொருட்களில் ஒரு பெரிய பகுதி, ஏற்கனவே தயாராக ரேஷன் கடைக்கு வந்துவிட்டது.
பொங்கல் பரிசு வழங்கும் பணி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்ததுமே, மிச்சமுள்ள வேட்டி, சேலைகளும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இலவச வேட்டி, சேலைகளுடன் பொங்கலை கொண்டாட போகிறோம் என்ற உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் தேனி மக்கள் காத்திருக்கிறார்கள்...!












Click it and Unblock the Notifications