காஷ்மீரெல்லாம் ஓரம் போ.. தேனி வந்து பாருங்க! கேரளாவில் மழை.. வேகமாக நிரம்பும் முல்லை பெரியாறு அணை..!
தேனி: கேரளாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடியிலிருந்து, 3150 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேக்கடியில் 108 மி.மீ.மற்றும் பெரியாறு அணையில் 101 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்கும் முக்கிய நீராதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணை தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டி உள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர் வரத்து ஒரே நாளில் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேக்கடியில் 108 மி.மீ மழை மற்றும் பெரியாறு அணையில் 101 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 397 கன அடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அனைத்து வரும் நீரின் அளவு வினாடிக்கு 3150 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து நேற்று வந்த அளவை எட்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இதன் காரணமாக நேற்று காலை அணையில் நீர் மட்டம் 119.40 அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து 120.65 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 2756 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் மேலும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் நீர்நிலைகள், அணிகள் நிரம்பி வருகின்றனர். குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications