Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவி பிரிந்து செல்ல மாமியார் தான் காரணம் என நினைத்தேன்.. தேனியில் மருமகன் பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

தேனி : எனது மனைவி பிரிந்து சென்றதற்கு எனது மாமியார் தான் காரணம் என்று கருதினேன். சம்பவத்தன்று மனைவியை பார்த்து பேசுவதற்காக வந்தேன். ஆனால், அவர் வீட்டில் இல்லை. லீலாவதி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் என் மாமியாரை வெட்டினேன் என்று பிச்சை முத்து என்பவர் தேனி அல்லிநகரம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த சின்னச்சாமி என்பவருடைய மனைவி லீலாவதி (வயது 38). சின்னசாமி சில வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு காமேஷ் (21) என்ற மகனும், கவுசல்யா (20) என்ற மகளும் உள்ளார்கள். லீலாவதிவின் மகன் காமேஷ் கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

theni crime marriage

கவுசல்யாவை, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த 26 வயதாகும் லாரி டிரைவர் பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார் லீலாவதி. இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவுசல்யா, தனது கணவரை பிரிந்து நான்கு மாதங்களாக அல்லிநகரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார். தேனியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். லீலாவதி தனது மகளுடன் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மாடி வீட்டில் முதல் தளத்தில் வசித்துவருகிறார்கள்.

நேற்று முன்தினம் காலை கவுசல்யா தேனியில் உள்ள ஜவுளிக்கடைக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லீலாவதி மட்டும் தனியாக இருந்தார். சரியாக காலை 9.30 மணியளவில், அவருடைய வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், கீழ் வீட்டில் வசிப்பவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் தனது முகத்தை துணியால் மூடியபடி மாடிப்படி வழியாக வெளியே வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சமையல் அறையில் லீலாவதி படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய தலை, கையில் பலத்த வெட்டுக்காயம் இருந்திருக்கிறது. இதனையடுத்து அங்கு மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தேனி அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சம்பவ இடத்துக்கு வந்து விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் ரத்தக் கறையுடன் இருந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றினர். சம்பவ இடத்துக்கு கைரேகை மற்றும் தடய அறிவியல் பிரிவு போலீசார் வந்து ஆய்வு செய்தனர்.

தடய அறிவியல் துறையினர் அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் லக்கி சம்பவம் நடந்த வீட்டுக்கு உடனே அழைத்து வரப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடியது. பெரியகுளம் சாலை, அம்பேத்கர் தெரு வழியாக சுமார் 600 மீட்டர் தூரம் சுற்றிச்சென்று காந்திநகர் பகுதியில் நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து லீலாவதி உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து லீலாவதியின் மகள் கவுசல்யா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கையில் ஒரு பையுடன் லீலாவதியின் மருமகனும் கவுசல்யாவின் கணவருமாகிய பிச்சைமுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து லீலாவதியை கொலை செய்து விட்டு பிச்சைமுத்து தனது சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என கருதினர்.

இதையடுத்து பிச்சைமுத்துவை பிடிக்க இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கொடைரோடு மீனாட்சிபுரத்தில் உள்ள பிச்சைமுத்துவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு அவர் பதுங்கியிருந்தார். பின்னர் அவரை அல்லிநகரத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் தனது மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து பிச்சைமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனது மனைவி பிரிந்து சென்றதற்கு எனது மாமியார் தான் காரணம் என்று கருதினேன். சம்பவத்தன்று மனைவியை பார்த்து பேசுவதற்காக வந்தேன். ஆனால், அவர் வீட்டில் இல்லை. லீலாவதி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன். பின்னர் தேனி பேருந்து நிலையம் சென்று பஸ்சில் ஊருக்கு சென்று விட்டேன். ஆனால், என்னை பின்தொடர்ந்து வந்த போலீசார் என்னை கைது செய்து விட்டனர்” என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து பிச்சைமுத்துவை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+