எங்கிட்ட நாட்டை தாங்க.. வெறும் அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்.. சீமான் நம்பிக்கை
தேனி: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில் ‛‛நாட்டை என்னிடம் கொடுத்தால் வெறும் அரை மணிநேரத்தில் வன்முறையை நிறுத்தி காட்டுவேன்'' என சீமான் தெரிவித்தார். மேலும் மணிப்பூர் வன்முறையின் பின்னணியில் ரகசியம் ஒழிந்திருப்பதாக கூறி முக்கிய விஷயம் ஒன்றையும் தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியக்குளம், போட்டி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் கட்சியின் உள்கட்டமைப்பை சீமான் மறுசீராய்வு செய்தார்.

அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தேர்தல்களை சந்திப்பதற்கு தயாராவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்த வேளையில் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மணிப்பூர் கலவரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து சீமான் கூறியதாவது:
மணிப்பூர் கலவரம் என்பது பிரதமர், அம்மாநில முதல்வருக்கு தெரியாமல் இல்லை. நேற்று காஷ்மீரில் என்ன நடந்ததோ, அதற்கு முன்பு என் ஈழத்தில் என்ன நடந்ததோ அதுதான் இன்று மணிப்பூரில் நடந்துள்ளது. இலங்கையில் சிங்களனை வைத்து அடித்து விரட்டினார்கள். காஷ்மீரில் ராணுவத்தை வைத்து மக்களை அடித்து விரட்டினார்கள். இப்போது மணிப்பூரிலும் அதேதான் நடக்கிறது.
மணிப்பூர் மாநில பிரச்சனை என்பது பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை வெளியேற்றிவிட்டு கனிமவளங்களை எடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம். தற்போது பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். மைத்தேயி மக்கள் உயர்ஜாதி இந்துக்களாக உள்ளனர். பழங்குடியினர் காடுகளில் உள்ளனர். மைத்தேயி மக்கள் பாஜக ஓட்டுகளாக கீழ்பகுதியில் உள்ளனர்.
இதனால் இருவருக்கும் மோதலை உருவாக்கி பழங்குடியினர்களை வெளியேற்றி இயற்கை வளத்தை சுரண்ட உள்ளனர். இப்போது லட்சக்கணக்கணக்கானவர்களை வெளியேற்றி விட்டனர். நீங்க என்கிட்ட நாட்டை நாட்டை அரைமணிநேரத்தில் கலவரத்தை நிறுத்துறேன்.. முடியுமா? முடியாதா?. சாதாரண குழந்தைகளிடம் கேட்டால் கூட இது அரசியல் என்பது தெரியும்'' என தெரிவித்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசக்கின்றனர். இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார்.
இங்கு குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் தங்களை பழங்குடி இனத்தில் சேர்க்க மைத்தேயி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு இனக்குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்தது. தற்போது 2 மாதங்களாக அங்கு வன்முறை தொடர்ர்ந்து வருவதோடு 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மணிப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications