தேனியை சுத்து போட்ட மழை மேகங்கள்..குமுளியில் ஜாம் ஆன ட்ராஃபிக்! நடுவழியில் தவித்த ஐயப்ப பக்தர்கள்
தேனி: தமிழகம் - கேரள எல்லை பகுதியை ஒட்டிய மலை பகுதிகளில் கனமழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமுளி மலைப் பாதையில் மரங்கள் விழுந்தால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக தமிழக - கேரளா எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் பல பகுதிகளில் நிலச்சரிவும், பாறைகள் சாலைகளிலும் விழுந்துள்ளனர்.

இதனால் இந்த சாலை வழியாகச் செல்லும் குமுளி மலைப் பாதையில் வன காளியம்மன் கோயிலை அடுத்துள்ள வளைவில் இரண்டு மரங்கள் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன.
இதன் காரணமாக தேனி மாவட்டத்திலிருந்து குமுளி மலைச்சாலை வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் திரும்பும் வாகனங்களும் நீண்ட நேரம் மழைச்சாலையில் அணிவகுத்து நின்றன.போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சபரிமலை செல்வதற்காக அவ்வழியாக வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனம் தற்காலிகமாக கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் இணைந்து சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின்னர் சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் இரு மார்க்கங்களிலும் நீண்ட நேரம் காத்திருந்த வாகனங்கள் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
ஏற்கனவே இன்று காலை போடிமெட்டு மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததன் காரணமாக போடிமெட்டு வழியாக கேரளா செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், குமுளி மலைச் சாலையிலும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் கேரளா செல்லும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்து வந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிந்தது. இதனால் வெறும் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடுமையான குளிர் குறைந்து மிதமான காலநிலை நிலவுவதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சன்னிதானத்தில் இருந்து சரங்குத்தி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் வரை ஆவதாக சபரிமலை சன்னிதான தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல கம்பம், குமுளி, போடி மெட்டு சாலைகளை பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் அடிக்கடி மண்சரிவு மற்றும் மரங்கள் விழும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பக்தர்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாலையில் தொடர்ந்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பக்தர்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications