சுடுகாட்டில் அரிசி.. திரண்டு வந்து சட்டியுடன் வந்து அள்ளி சென்ற மக்கள்.. தேனியில் ஒரே பரபரப்பு
போடி சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தேனி: தேனி மாவட்டம் போடி சுடுகாட்டில் குவியல் குவியலாக ரேஷன் அரிசி கொட்டப்பட்டிருந்தது.. யார் இந்த வேலையை செய்தது என்று தெரியவில்லை.. ஆனால் சுடுகாட்டுக்கு வந்து, கொட்டப்பட்ட ரேசன் அரிசியை பொதுமக்கள் போட்டி போட்டு தங்களது வீடுகளுக்கு அள்ளி சென்றனர்!
Recommended Video
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.. மக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. இதனால் பல்வேறு தரப்பினர் வேலையின்றி உள்ளனர்.. குறிப்பாக தொழிலாளிகள், விவசாயிகள் வறுமையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏழை, எளிய மக்களுக்கு சரியான உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.. இந்நிலையில், தேனி மாவட்டம் போடி மயானம் அருகே அரிசி மூட்டைகள் கிடந்தன.. சுடுகாட்டிலேயே மூட்டை மூட்டையாக அரிசி மூட்டைகள் கிடந்ததுடன், அரிசி கொட்டப்பட்டும் கிடந்தது.
பிரிக்காத அரிசி மூட்டைகள் ஒரு பக்கமும், குவியலாக அரிசி ஒரு பக்கமும் இருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... பிறகு இந்த தகவல் அக்கம் பக்கம் பகுதிகளிலும் பரவியது.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக சுடுகாட்டுக்கு வந்து அரிசியை வீடுகளுக்கு அள்ளி சென்றனர்.. ஆனால் அந்த அரிசியில் புழுக்கள் இருந்தன.. கெட்டுப் போய் இருந்தது.
இருந்தாலும் மொத்தமாக ஆளாளுக்கு அள்ளி கொண்டு போனார்கள்... சுடுகாட்டில் ரேஷன் அரிசியை இப்படி கொட்டியவர்கள்? ஏன் கொட்டினார்கள்? என்று தெரியவில்லை.. இது சம்பந்தமாக தேனி மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications