"வாங்க தண்ணி அடிக்கலாம்".. ஆசையாக சென்ற பாண்டியன் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்!
தேனி அருகே ஒருவர் கல்லை போட்டு நண்பரை கொலை செய்துள்ளார்
Recommended Video
தேனி: "வாங்க தண்ணி அடிக்கலாம்" என்று சொல்லி நண்பர் அழைக்கவும், நம்பி போனார் பாண்டியன்.. கடைசியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு விட்டார்.
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். 45 வயதாகிறது. இவர் தச்சு வேலை செய்து வந்தவர். முத்தம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் வெண்ணிலாவுக்கு 21 வயதாகிறது, மகன் தமிழ்ச்செல்வனுக்கு 12 வயதாகிறது.
அதே ஊரை சேர்ந்தவர் சென்றாயபெருமாள். இவர் பாண்டியனின் நண்பர் என்று கூறப்படுகிறது. நேற்றிரவு பாண்டியனை இவர் மது குடிக்க அழைத்தார். நண்பன் ஆசையாக கூப்பிடவும், பாண்டியனும் கிளம்பி சென்றுள்ளார். இருவரும் ஒரு டாஸ்மாக்கில் நன்றாக குடித்து விட்டு வந்து கொண்டிருந்தனர்.

ராஜதானி அருகே ஆரோக்கிய அகம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென பாண்டியனை கீழே தள்ளிவிட்டார் சென்றாய பெருமாள். இதனால் நிலைகுலைந்து போன பாண்டியன், ஒன்றும் புரியாமல் விழித்தார்.. அடுத்த செகண்டே, பக்கத்தில் கிடந்த ஒரு பெரிய கல்லை தூக்கி பாண்டியன் தலையில் போட்டார். இதில் மண்டை பிளந்து பாண்டியன் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் சென்றபாய பெருமாள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவ்வழியே வந்தவர்கள், பாண்டியன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து, ராஜதானி போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், பாண்டியன் உடலை கைப்பற்றி ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிரடியாக சென்றாயபெருமாளையும் பிடித்து கைது செய்தனர். எதனால் சென்றாயபெருமாள் கொலை செய்தார் என்பது உடனடியாக தெரியவில்லை என்பதால் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications