ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல்.. அதிமுக வெற்றி பெற ஜெ.வின் ஆன்மா உதவும்- அமைச்சர் பேச்சு
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஜெயலலிதாவின் ஆன்மா உதவி செய்யும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஆண்டிப்பட்டி எம்எல்ஏவாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இவர் மட்டுமல்லாது இன்னொரு 17 பேரும் தகுதி நீக்க்ம செய்யப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
எனினும் இரு நீதிபதிகள் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துவிட்டனர். மேலும் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையையும் அவர்கள் நீக்கினர். இதனால் அவர்களின் தகுதி நீக்கம் உறுதியானது. இதைத் தொடர்ந்து 18 தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டது.

அமமுக
18 தொகுதிகளுக்கும் உறுப்பினர்கள் காலமான இரு தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்டவை கடும் போட்டியில் உள்ளனர்.

ஆன்மா
இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றிபெற ஜெயலலிதாவின் ஆன்மா உதவி செய்யும்.

கிண்டல்
தங்கத்தமிழ்ச்செல்வன் நாளை எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நியாயம்
அதாவது சொந்த தொகுதியான ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வராத ஜெயலலிதாவின் ஆன்மா இந்த தேர்தலுக்கு மட்டும் எப்படி வரும் என அமைச்சரை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதுவும் நியாயம்தானே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications