போதும்.. லிஸ்ட் பெரிசாயிட்டே போகுது! நள்ளிரவில் ஓபிஎஸ் வீட்டில் குவிந்த ‘தலைகள்’! ஹாப்பி அண்ணாச்சி!
தேனி : தேனியில் தற்போது உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து சால்வை பூங்கத்து கொடுத்து ஆதரவு அளித்த நிலையில், நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கட்சிக்குள் கடந்த சில நாட்களாகவே கலவரம் வெடித்து வருகிறது.
ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கி வருவது போல கட்டமைக்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
ஏற்கனவே தொண்டர்களின் ஆதரவு முழுக்க முழுக்க தனக்கு தான் உள்ளது என கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது மாவட்ட அளவிலான நிர்வாகிகளையும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளையும் தனது தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதற்கு பலனாக பல பகுதிகளில் இருந்தும் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நிர்வாகிகள் ஆதரவு
இந்நிலையில் தேனியில் தற்போது உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து சால்வை பூங்கத்து கொடுத்து ஆதரவு அளித்த நிலையில், நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹார பகுதியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களது இல்லத்திற்கு இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட தர்மர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

இராமநாதபுரம்
மேலும் திருவாடனை, ஆர். எஸ்.மங்களம், ராமநாடு, கடலாடி முதுகுளத்தூர், மண்டபம், ராமேஸ்வரம், போகலூர், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து ஆலோசனை நடத்தினர்.

உற்சாகம்
அதில் ராமநாதபுரத்தில் விரைவில் ஒரு மிகப்பெரிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வலுவான நிர்வாகிகள் ஆதரவை பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வரும் நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக அவரது தரப்புக்கு தாவியுள்ளது உற்சாகத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications