தேனி நந்தினி அரசு மருத்துவமனையில் செய்த காரியம்.. இப்படியுமா செய்வாங்க.. ஆடிப்போன மக்கள்
தேனி: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த 82 வயதாகும் கமலம் என்பவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார். அந்த மூதாட்டியின் உடலில் இருந்து 4 பவுன் தங்க செயினை நந்தினி என்ற பெண் திருடியிருக்கிறார். அவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி கமலத்திற்கு 82 வயதாகிறது. கமல் முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது அவரது உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். ஆனால் வரும் நிலையில் வரும் வழியிலேயே மூதாட்டி கமலம் சுயநினைவை இழந்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் வந்த கமலத்தை அவசர சிகிச்சை பிரிவு அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்நிலையில், அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் இருந்த 4 சவரன் தங்க செயின் திருடு போயிருந்தது.
இது குறித்து மூதாட்டியின் மருமகன் ரவிச்சந்திரன் கானாவிலக்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பெண் ஒருவர் மூதாட்டியின் சடலத்தில் இருந்து தங்க செயினை திருடி சென்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண் யார் என்று மருத்துவமனைக்கு வந்தவர்கள் மற்றும் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உறவினரின் சிகிச்சைக்காக வந்த தேனி வளையப்பட்டியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் தான் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாகியிருந்த நந்தினியை கானாவிலக்கு காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்க செயினை சிகிச்சை அறையில் இருந்தே பெண் ஒருவர் துணிகரமாக திருடிய சம்வம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மூதாட்டியின் சடலத்தில் இருந்து தங்க செயினை லாவகமாக நந்தினி திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியிருக்கிறது.. அதில், மருத்துவமனையில் உள்ள 802 வது அறையின் வெளியே நின்று கொண்டிருந்த நந்தினி, யாராவது நம்மை பார்க்கிறார்களா என்று பார்க்கிறார்.. பின்னர் யாராவது வருகிறார்களா என்று நோட்டமிடுகிறார்.
ஆட்கள் யாரும் வராத நேரம் பார்த்து மூதாட்டியின் உடல் அருகே வேகமாக செல்கிறார். பின்னர் மருத்துவமனை பணியாளர்கள் வருவதை பார்த்தவுடன் மீண்டும் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து வேகமாக செல்கிறார் . நந்தினி செயினை திருடுவது அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியை வைத்து தான் அவரை போலீசார் கைது செய்ததுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications