சொந்த மாவட்டத்திலேயே ஓபிஸ்-க்கு கிடைத்த ஷாக்.. தேனியில் சகோதரர் சண்முக சுந்தரம் அணி தோல்வி
தேனி: தேனி மாவட்ட திட்டக்குழு தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ சண்முக சுந்தரம் அணி தோல்வி அடைந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ பன்னீர் செல்வத்துக்கு மோதல் ஏற்பட்டது. இதனால், அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடியாக நீக்கியது. கட்சியும் முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு விட்டதாகவும் இனி எக்காலத்திலும் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று அதிமுக தரப்பு கூறி வருகிறது.

எனினும், சட்ட போராட்டங்களை ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து நடத்தி வருகிறது. பொதுக்குழுவை எதிர்த்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அதோடு தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த பின்னடைவு ஏற்பட்டாலும் தற்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக வரும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்து செயல்படுவேன் என தனியாக ஒரு பாதையையும் ஓபிஎஸ் தொடங்கியிருக்கிறார். இதனிடையே, தேனி மாவட்ட திட்டகுழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ சண்முகசுந்தரம் தலைமையிலான அணி தோல்வி அடைந்துள்ளது.
தேனி மாவட்ட திட்டக்குழுவிற்கு 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்து. இதில் 5 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 7 உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. திமுக சார்பில் ஒரு அணியும் ஓபிஎஸ் சகோதரரும் பெரிய குளம் நகராட்சி கவுன்சிலருமான ஓ சண்முகசுந்தரம் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட 7 பேரும் வெற்றி பெற்றனர். ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ சண்முகசுந்தரம் உள்பட அவரது அணி தோல்வி அடைந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் அவரது சொந்த மாவட்டத்தில் தோல்வி அடைந்து இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications