தனியாக வந்த ஓபிஎஸ்.. சொந்த ஊரில் கூட யாரும் வரவில்லை.. வெறிச்சோடிய பெரியகுளம் வீடு
அதிமுக வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு வந்த நிலையில், அவருடன் யாரும் வரவில்லை. தனியாக வந்து இறங்கினார்.
தேனி: அதிமுக வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு வந்த நிலையில், அவருடன் யாரும் வரவில்லை. தனியாக வந்து இறங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீடு வெறிச்சோடி காணப்பட்டது.
அதிமுகவில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் எனவும் ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓ பன்னீர் செல்வத்திற்கு கடும் பின்னடைவாக அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.
அதே சமயம் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அதிமுகவில் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக ஒற்றைத்தலைமை விவகாரத்தால் நடைபெற்று வந்த மோதல் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

பெரிய பின்னடைவு
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு அன்புமணி, திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதிமுக விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்திற்கு டெல்லி ஆதரவு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள், சிவில் கோர்டில் தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறினாலும், சிவில் வழக்கு அவ்வளவு எளிதில் உடனே முடிந்து என்பதால், அதற்கு எடப்பாடி பழனிசாமி பெரிய பலத்துடன் மாறிவிடுவார் என்பதால் சிவில் கோர்டில் முறையிடும் ஆப்சன் பெரிதாக கைகொடுக்குமா என்பது சந்தேகம் தான் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

வாழ்க்கை சூனியம்
பாஜகவை, டெல்லி மேலிடத்தை மலைபோல நம்பி நின்று தற்போது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி அரசியல் வாழ்க்கையே சூனியம் என்ற நிலைக்கு ஓபிஎஸ் தள்ளிவிட்டப்பட்டிருக்கிறார் என்பது மூத்த பத்திரிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது. பலரும் இதுபற்றி ட்விட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். தீர்ப்பை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டு இருக்கிறார் என்றே கூறியுள்ளார்கள்.

தொண்டர்கள்
இதனிடையே தீர்பை ஒட்டி இன்று காலை ஓ பன்னீர்செல்வம் வெல்வார் என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர் இருக்கும் சென்னை ஆர்ஏ புரம் கிரீன்வேஸ் இல்லத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கே வெடிகள் வாங்கி வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் இனிப்புகள் வாங்கி வைக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் சிலரும் அங்கே இருந்தனர். ஆனால் பெரிதாக நிர்வாகிகள் இல்லை. எடப்பாடி தரப்புடன் ஒப்பிடும் போது குறைவாகவே நிர்வாகிகள் இருந்தனர்.

யாரும் இல்லை
தீர்ப்பு வந்த நிலையில் ஓபிஎஸ் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள கிரீன்வேஸ் சாலை வெறிச்சோடி கிடந்தது.. காலை முதலே நிர்வாகிகள் அங்கு இல்லை. எடப்பாடி தரப்புதான் கட்அவுட், பாலுடன் தயாராக இருந்தது. அவர் வீட்டில் பெரிய அளவில் நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் இருந்தன. இவர்கள் எல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் பன்னீர்செல்வம் இருக்கும் வீடு களையிழந்து காணப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் வீட்டை நிர்வாகிகள் யாரும் எட்டிப்பார்க்கவில்லை. வெளியே இருந்த 10 தொண்டர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டிருந்தார்.,

பெரியகுளம் வீடு
இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் இன்று தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரது வீடு உள்ள பகுதிகளில் வழக்கமாக தொண்டர்கள் அதிகமாக காணப்படுவார்கள். இன்று யாருமே அந்த பகுதியில் வரவில்லை. தொண்டர்கள் யாருமின்றி சொந்த ஊரில் உள்ள அவரது வீடு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஓ பன்னீர்செல்வமும் தனியாகவே வந்து இறங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
-
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications