தேனி அருகே குப்பை கொட்டும் விவகாரம் ஜாதி மோதலாக வெடித்தது- உரல் கல்லால் தாக்கியதில் ஒருவர் பலி!

Subscribe to Oneindia Tamil

தேனி : தேனி அருகே குப்பை கொட்டியதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனது வீட்டருகே சிலர் குப்பை கொட்டி வந்ததை கண்டித்துள்ளார். இந்நிலையில், இன்று ஊர்க்காலன் என்பவர், அதே இடத்தில் குப்பையை கொட்டும்போது, அவரை சத்தம் போட்ட ராதாகிருஷ்ணன், சாதி குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இருதரப்பினருக்கு இடையே மோதல்

இருதரப்பினருக்கு இடையே மோதல்

இதனால் அவரது சமுதாயத்தை சேர்ந்த மகேஸ்வரகுமார் என்பவர் ராதாகிருஷ்ணனை கண்டித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றிப்போய் கைகலப்பாக மாறியதில், இரு​ தரப்பைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து மகேஸ்வரகுமா​ர் என்பவரை​​த்​ தாக்கியிருக்கிறார். தடுக்க வந்த அவர் சகோதரர் நாகராஜ்மீது உரல்​ ​கல்லைப் போட்டிருக்கிறார். இதில் மகேஸ்வரகுமார் அவர் சகோதரர் நாகராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், மகேஸ்வரகுமாரின் மனைவி மாணிக்கவாசுகி, மகள் ஜனனி, சகோதரர் நாகராஜின் மனைவி திலகவதி உறவினர் ராமலிங்கம் ஆகியோர் காயமடைந்தனர்.

படுகாயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

படுகாயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கப்பக்கத்தின்ர், அவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.​ ​அதில் மகேஸ்வரகுமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

உறவினர்கள் போராட்டம்

இதனிடையே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி மகேஸ்வரகுமாரின் உறவினர்கள் பூதிப்புரம் - தேனி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் 5 பேர் கைது

குற்றவாளிகள் 5 பேர் கைது

போராட்டத்தைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்சுதர் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பூதிப்புரம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குப்பை கொட்டியதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+