இலைக்கு மேல் தான் தாமரை மலரும்..அதிமுகவுக்கும் எங்களுக்கு பங்காளி சண்டை தான்! படக்கென பேசிய டிடிவி.!

Subscribe to Oneindia Tamil

தேனி: தங்களுக்கு அதிமுகவிற்கும் இருப்பது பங்காளி சண்டை அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஓபிஎஸ் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். தற்பொழுதும் அதிமுகவில் ஸ்லீப்பர்செல் உள்ளார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் இலைக்கு மேல் பூ மலர்வது தான் இயற்கை அதனை உவமையாக தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி உருவாகியிருக்கும் நிலையில், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சிக்குள் மீண்டும் சேர்ப்பது, டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான் தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதையும், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் பாஜக ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என பாஜக தரப்பு வற்புறுத்தி இருக்கிறது.

theni ttv dhinakaran aiadmk

முதலில் அதற்கு எடப்பாடி ஒப்புக்கொல்லாத நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதற்கு கட்சியில் இல்லாமல் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தயார் என எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களுக்கு அதிமுகவிற்கும் இருப்பது பங்காளி சண்டை அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஓபிஎஸ் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியில் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்," அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி இன்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தார் அது போல ஒரு கூட்டணி தான் தற்போது அமைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் தொடர்ந்து இணைந்து வருவதால் தோல்வி பயத்தில் ஸ்டாலின் இதுபோன்று பேசுகிறார். இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறிய கருத்து கேட்கிறீர்கள்.

இலைக்கு மேல் பூ மலர்வது தான் இயற்கை அதனை உவமையாக தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் தங்கள் கூட்டணிக்கு வருவார்கள் இதனை பொறுத்திருந்து பார்க்கலாம்,.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்பொழுது அதிமுக இணைந்துள்ளதால் ஓபிஎஸ் நிலைப்பாடு எப்படி இருக்கும் மற்றும் தொடர்ந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என தொடர்ந்து கூறி வந்தேன். தற்போது நிலைப்பாடு என்ன என கேட்கிறார்கள். தங்களுக்கு அதிமுகவிற்கும் இருப்பது பங்காளி சண்டை அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஓபிஎஸ் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். தற்பொழுதும் அதிமுகவில் ஸ்லீப்பர்செல் உள்ளார்களா என்றால், திரும்ப திரும்ப சொல்கிறேன் அதிமுகவில் இன்றும் தங்களின் ஸ்லீப்பர் செல் உள்ளனர்" என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+