அங்க குண்டர்கள்! இங்க தொண்டர்கள்.. அதிமுக தலைவராகணும்னு எனக்கு ஆசை கிடையாது.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு
தேனி: அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எனது ஆசையே தவிர முதல்வராக வேண்டும் என்றோ கட்சியின் தலைவராகவ வேண்டும் என்றோ எனக்கு ஆசையே இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஜூன் 23 ஆம் தேதிக்கு இருந்த நிலையே தொடரும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனால் ஓபிஎஸ் குஷியில் உள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த நிலையில், அவர் பக்கம் இருக்கும் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்கள். தீர்ப்புக்கு பிறகு ஓபிஎஸ்ஸின் பெரியகுளம் வீடும், கிரீன்வேஸ் சாலையும் பிஸியாக இருக்கிறது.

தீர்ப்புக்கு முன்பு
தீர்ப்புக்கு முன்பு கிரீன்வேஸ் சாலை வீட்டின் கேட்டை திறந்து வைத்து தொண்டர்கள் வருவார்களா என ஓபிஎஸ் காத்திருந்த நிலை இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தீர்ப்புக்கு பிறகு ஓபிஎஸ்ஸை காண ஆதரவாளர்கள் திரண்டு வருகிறார்கள். எல்லாரிடமும் பொன்னாடைகளையும் பூக்கூடைகளை வாங்கி வாங்கி ஓபிஎஸ் டயர்ட் ஆகும் அளவுக்கு கூட்டம் காணப்படுகிறது.

தேனி பெரியகுளம்
அந்த வகையில் தற்போது தேனி பெரியகுளத்தில் இருக்கும் ஓபிஎஸ்ஸை காண திரளான ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களது முன்னிலையில் ஓ பன்னீர் செல்வம் பேசுகையில், என் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி.

ஒருங்கிணைக்க வேண்டும்
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்றோ அதிமுகவின் தலைவராக வேண்டும் என்றோ நான் ஆசைப்படவில்லை. என் பக்கம் தொண்டர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டரகள் உள்ளார்கள்.

எம்ஜிஆர்- ஜெயலலிதா
எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் பயணிக்க வேண்டும் எஎன்பதே எனது விருப்பம். ரவுடிகளையும் குண்டர்களையும் வைத்து எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை நடத்தினார். அதை சட்டப்படி தோற்கடித்துவிட்டோம் என ஓபிஎஸ் பேசினார். அப்போது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications