அண்ணன் வழியில்.. அரசியலில் கலக்கத் துடிக்கும் ஓபிஎஸ்ஸின் 2வது மகன்
Recommended Video
தேனி: அண்ணன் ரவீந்திரநாத் குமார் மின்னல் வேகத்தில் அரசியலில் உச்சம் தொட்டிருப்பதால் அவரது பாணியில் தம்பி பிரதீப்பும் அரசியலில் கலக்க ஆர்வமாக உள்ளாராம். ஆனால், தம்பியை சற்று அமைதி காக்க சொல்லுமாறு தந்தையிடம் கூறியுள்ளாராம் ரவீந்திரநாத் குமார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஓ.பி.ரவீந்தரநாத் தேனி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும், எம்.பி.யாகவும் இருக்கிறார்.
இளைய மகன் பிரதீப் கட்சியில் பொறுப்பு ஏதும் வகிக்காவிட்டாலும் கூட அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பொதுவாக ஊடக வெளிச்சத்தில் இருந்து தள்ளியே இருக்கும் பிரதீப் அண்மைக்காலமாக லைம் லைட்டுக்கு வரும் முடிவில் இருக்கிறாராம்.

3 பேர்
ஏற்கனவே ஓ.பி.எஸ்., அவரது தம்பி ஓ.ராஜா, ரவீந்தரநாத் குமார் என ஒரே குடும்பத்தில் 3 பேர் அரசியலில் அதுவும் அரசுப்பதவிகளில் உள்ளனர். இந்நிலையில் மேலும், ஒருவர் தனது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி..

அவசரம் வேண்டாம்
தான் மக்களவை உறுப்பினரானதே கட்சியில் பலரது கண்களை உருத்துவதாகவும், இந்த சூழலில் தம்பியும் வந்தால் அது அப்பாவுக்கு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் எனவும் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு விவரித்திருக்கிறார். அவர்களும் பிரதீப்பை அவசரப் படவேண்டாம் எனச் சொல்லுங்கள்..பார்த்துக்கலாம் என ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொண்டர் மட்டுமே
புரட்சித் தலைவரும், அம்மாவும் கட்டிக்காத்த அதிமுகவுக்கு தொண்டனாக பிரதீப் என்ன நல்லது செய்ய முடியுமோ அதை மட்டுமே அவர் செய்கிறார் என்றும், மற்றபடி அவருக்கு எந்த ஆசையும் இல்லை என்றும் கூறுகின்றனர் பிரதீப்பின் நட்பு வட்டத்தினர்.

கலக்கப் போவது உறுதி
ஆக மொத்தம் ஓபிஎஸ்ஸின் எதிர்கால படைத் தளபதிகளாக இரு மகன்களும் கலக்கப் போவது மட்டும் உறுதி என்று ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications