எல்லாம் ஓவர்.. நிரந்தர பிளவை உண்டாக்கிய எடப்பாடி! ஓபிஎஸ் அடுத்த ‘இன்னிங்ஸ்’ ஆரம்பம்.. புகழேந்தி பரபர
தமிழ்நாடு அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தேனி : "3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. ஈபிஎஸ்ஸின் தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுகவில் பிளவு என்பது உறுதியாகி விட்டது." என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்ஸின் தாயார் மறைவையடுத்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இரங்கல் தெரிவித்ததோடு ஓபிஎஸ்ஸை போனில் தொடர்பு கொண்டும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை கூட விடவில்லை. பேட்டியின்போது செய்தியாளர் கேட்ட பிறகே ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இது ஓபிஎஸ் தரப்பை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

கேசி பழனிசாமி - புகழேந்தி
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 24-ஆம் தேதி காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி உடன் இருந்தார்.

கண் கலங்கினார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "ஓபிஎஸ் தாயார் இறப்பதற்கு முதல் நாள். மதியம் ஓபிஎஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே கண் கலங்கினார். காரணம் கேட்டபோது, 'அம்மாவுக்கு நினைவு தப்பிவிட்டது என்னையும் யாரையும் அடையாளம் தெரியவில்லை' என்றார். இந்த நேரத்தில் ஏன் விட்டுவிட்டு வந்தீர்கள் என கேட்டோம். 'இந்த நேரத்தில் வரவில்லை என்றால் ஓபிஎஸ் பயந்துவிட்டார் என சொல்லுவார்கள்' என்றார். அப்போதே அவரது மனம் சங்கடப்பட்டது. பின்னர் அவரது தாய் இயற்கை எய்திவிட்டார் என செய்தி வந்தது.

எடப்பாடி வருத்தம்
3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. யாரோ ஒரு நிருபர் கேட்ட பின் எடப்பாடி பழனிசாமி இதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சியினர் கூட இரங்கல் தெரிவித்து நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். அரசியலில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். திமுக அமைச்சரின் இல்ல இறப்பு நிகழ்ச்சிக்கு கூட அதிமுக தலைவர்கள் சென்று ஆறுதல் கூறிய சம்பவங்களை பார்த்திருக்கின்றோம்.

நிரந்தர பிரிவு
முன்னாள் முதல்வரின் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்த பின்னும் தன் மனநிலையை காரணம் காட்டி சர்வாதிகார போக்கில் செல்லும் நபரை என் வாழ்நாளில் நான் பார்த்தது இல்லை. இக்கட்சியை வழிநடத்தி மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி அவரது துக்கத்தில் பங்கெடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவின்போது ஓ.பன்னீர்செல்வம் இறுதிவரை இருந்து அவரது துக்கத்தில் பங்கெடுத்தார். எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுகவில் பிளவு என்பது உறுதியாகி விட்டது.

கைகழுவிய பாஜக
ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள். இனிமேல் அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பண்ருட்டி ராமச்சந்திரன் எது சொன்னாலும் 100% சரியாகத்தான் இருக்கும். ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியபோது, முதலில் ஏற்றுக்கொள்ளாத எம்ஜிஆர் பின்னர் உணர்ந்து கொண்டார். பண்ருட்டியார் கூறியது போல தமிழ்நாடு அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது. ஓபிஎஸ்ஸின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல் தான் தொடங்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications