தேனியில் பகீர்.. ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவர்.. இளைஞர் செய்த கொடூரமான காரியம் !
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த அருண்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு 75 வயதான பொன்ராம் என்ற முதியவர் வீட்டில் இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மகள் மாரியம்மாள் அவரின் சாவில் மர்மம் உள்ளதாக தேவதானபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார், இதையடுத்து முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறை விசாரணை
பிரேத பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் முதியவரின் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவரின் வீட்டிற்கு நாள்தோறும் அருண்குமார் என்ற இளைஞர் வந்து செல்வார் என தெரிய வரவே அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கத்திய முதியவர்
அருண்குமாரும் அவர் நண்பரும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளனர். அவரது நண்பர் திருமணமாகி சென்ற நிலையில் இவர் மது போதையில் முதியவரின் வீட்டிற்கு சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்த முயன்றபோது முதியவர் கத்தியதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக அருண்குமார் தெரிவித்தார்.

கொலை வழக்கு பதிவு
இதை தொடர்ந்து அருண்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

பெரியகுளம்
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட அருண்குமாரை நீதிபதி முன் நிறுத்தபட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.. ஓரின சேர்க்கைகாக முதியவரை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications