வெடித்த போராட்டம்.. பழனியில் மாணவிகள் சாலையில் இறங்கி முழக்கம்.. உச்சம் பெறும் பொள்ளாச்சி வழக்கு!
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் எல்லோரையும் கைது செய்ய கோரி தற்போது உடுமலைப்பேட்டை பழனி சாலையில் பெண்கள் கல்லூரி மாணவிகள் போராடி வருகிறார்கள்.
Recommended Video

பழனி: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் எல்லோரையும் கைது செய்ய கோரி தற்போது உடுமலைப்பேட்டை பழனி சாலையில் பெண்கள் கல்லூரி மாணவிகள் போராடி வருகிறார்கள். நுற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களை கண்டித்து தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மாபெரும் மாணவர் புரட்சி வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நாளுக்கு நாள் இது குறித்து வெளியாகும் உண்மைகள் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் போராட்டம்
தற்போது இந்த கொடூரத்தை எதிர்த்து உடுமலைப்பேட்டை பழனி சாலையில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஜிவிவி பெண்கள் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 1000க்கும் அதிகமான மாணவிகள் சாலை மறியல் செய்து போராடி வருகிறார்கள்.

பெண்கள் களத்தில்
போராட்டம் செய்யும் எல்லோரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை போலீசார் அப்புறப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். குற்றவாளிகள் எல்லோரையும் கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போராட்டக்காரர்கள் சாலை மறியலும் செய்து வருகிறார்கள்.

பல்வேறு இடங்களில் போராட்டம்
இந்த பொள்ளாச்சி விவகாரம் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு கல்லூரி மாணவிகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, பழனி, நெல்லை, மன்னார்குடி என்று பல பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் போராட்டம்
அதேபோல் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவ , மாணவிகளும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று செய்திகள் வருகிறது. சென்னையில் உள்ள கலைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. இதனால் சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications