கோவிலுக்குள்ளேயே இப்படியா? மிட்டாய் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! வக்கிர பூசாரி கைது..!
தேனி : தேனி அருகே கோவிலுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தாக்குதலுக்கு பயந்து கோவிலுக்குள் சென்று பூட்டிக் கொண்ட பூசாரியை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் குறிப்பாக சிறுமியர்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது.

குறிப்பாக பள்ளி கல்லூரிகளில், ஆசிரியர்கள், பணியாளர்களால் சிறுவர்- சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் சம்பவம், திருச்சி என்ஐடி சம்பவம், நாமக்கல் பள்ளி சம்பவம் என கடந்த சில நாட்களில் பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தேனியில் கோவிலுக்குள் வைத்து, கோவிலின் பூசாரியால் சிறுவர் சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமு, உயிருக்கு பயந்து கோவிலுக்கு சென்று பதுங்கிய பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் வடகரை பகுதியில் பிரபலமான கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் 65 வயதான திலகர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். அக்கோவிலில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கோவிலைத் திறந்து திலகர் பூஜை செய்வது வழக்கம், பூஜையின் போது அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் கோயில் முன்பாக மைதானம் போன்று இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்கள் தினமும் மாலை நேரங்களில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்ற நிலையில் திலகர் கோவிலுக்குள் விளையாடிக் கொண்டைருந்தனர். அப்போது சில குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அதில் இரு சிறுமிகளை அழைத்த திலகர் அவர்களுக்கு இனிப்பு தருவதாக கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.
தொடர்ந்து அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர் சிறுமிகள் சத்தம் போட்டதோடு கோவிலில் இருந்து அலறிக் கொண்டே வெளியே ஓடி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியுள்ளனர். இதனால் அச்சமடைந்த திலகர் எங்கே தன்னை அவர்கள் தாக்கி விடுவார்களோ என பயந்து போய் கோவிலுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவைத் திறந்து திலகரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் திலகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவிலுக்குள் சிறுவர் சிறுமியருக்கு பூசாரி பாலியல் தொல்லை அளித்த சம்பவமும் அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications