ஆண்டிப்பட்டியில் ஆரம்பமே அமர்களம்.. புது டாஸ்மாக் கடைக்கும் பூஜை கூட போடலை.. சபாஷ் பெண்கள்
தேனி: டாஸ்மாக் கடை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த வேனை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் டாஸ்மாக்கிற்கு வந்த லாரி,மதுபானங்களை இறக்காமல் அப்படியே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளை எந்த காரணம் கொண்டும் திறக்க விட மாட்டோம் என்று பெண்கள் கூறினார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடையை, அருகில் உள்ள அனுப்பப்பட்டி என்ற கிராமத்துக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து அனுப்பப்பட்டியில் புதிய கடை தொடங்குவதற்காக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் அங்கு டாஸ்மாக் கடை தொடங்க போகிறது என்பதை அறிந்த அப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் எதிர்ப்பை மீறி புதிய கடையை தொடங்குவதற்காக நேற்று காலை தேனியில் இருந்து மினி வேனில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அனுப்பப்பட்டியை சேர்ந்த பெண்கள், டாஸ்மாக் கடை முன்பு திரண்டார்கள். மேலும் அங்கு வந்த மினி வேனை சிறைபிடித்தனர். பின்னர் டாஸ்மாக் கடை அமையவுள்ள இடம், பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடமாடும் பகுதியாக இருக்கிறது என்று எததிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். எனவே டாஸ்மாக் கடையை அமைக்கும் நடவடிக்கை கைவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள், போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. போராட்டம் குறித்து கூறிய அனுப்பப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை தொடங்க எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அவ்வாறு கடை அமைக்கப்பட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications