Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி கழிவறைகளில் என்ன நடக்குது.. உள்ளே பார்த்து ஆடிப்போன பொதுமக்கள்.. போலீசுக்கே ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாநகரில் ஏராளமான மதுக்கடைகளும், மதுபான பார்களும், மகளிர் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன. எங்கு பார்த்தாலும் மதுக்கடைகளும், பார்களும் இருக்கிறது. இதுதவிர பல்வேறு மலை அடிவாரப்பகுதிகளை திறந்தவெளி பார் ஆகவும் பயன்படுத்துகிறார்கள். இது போதாது என்று கழிவறைகளுமே இப்போது பார் ஆக மாறி உள்ளது. கழிவறைகளில் மதுபானங்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்,

தேனி மாவட்டம் என்பது மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்ட அற்புதமான இயற்கை பூமியாகும்.தேனி, பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்ட்டி என எந்த ஊரிலும் இருந்து சில நிமிடங்களில் மேற்கு தொடர்ச்சிமலைக்குள் போய்விட முடியும். அதுமட்டுமல்ல மேகலை, குரங்கணி, டாப் ஸ்டேஷன், போன்ற சுற்றுலா தலங்களையும், கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, கொழுக்குமலை போன்ற பல்வேறு மலைவாசல் தலங்களை எல்லையாக கொண்டுள்ளது. இதனால் பல சுற்றுலா பயணிகள் தேனி வழியாக செல்கிறார்கள்.

Public inconvenience due to toilets turning into liquor bars in Theni area

இங்கு ஏராளமான மதுக்கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளன. இந்த மதுக்கடைகளை தாண்டி சில பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் மீது போலீசார் அடிக்கடி கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் டாஸ்மாக்கில் மதுபானங்களை வாங்கி விற்கும் தொழில் அதிக லாபம் கிடைப்பதால் , இதனை பலர் செய்கிறார்கள்.. என்ன தான் வழக்கு பதிவு செய்தாலும், இந்த குற்றத்தை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் செய்வதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் எனில், தேனி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில கட்டண கழிவறைகளை மதுவிற்பனை செய்யும் இடமாக சிலர் பயன்படுத்தி வருவதை கடந்த காலங்களில் காண முடிந்தது. தேனி பங்களாமேடு, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்று கழிவறைகள் அருகில் மதுவிற்பனை செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவும் செய்திருக்கிறார்கள்,

அந்த வகையில் தேனி பங்களாமேடு கட்டணக் கழிவறை அருகில் மதுவிற்பனை செய்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த வாலிபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதுபோல் சில கழிவறைகளில் மதுபானங்களோடு, மிக்சர், ஊறுகாய் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுவாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இப்படி கழிவறைகளில் மதுபானங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை திறந்த வெளி பாராக பயன்படுத்துவதையும் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+