Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் 3 லட்சம்.. இப்போது இந்த பாம்பின் மதிப்பு 50 லட்சம்.. வனத்துறையையே ஆடிப்போக வைத்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி: மண்ணுளி பாம்பு என்று Red Sand Boa என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாம்பு.. இது அறிவியலுக்கும் அறிவுக்கும் எட்டாத ஒரு மாபெரும் "மூடநம்பிக்கை மார்க்கெட்" ஆக இருக்கிறது. மண்ணுளி பாம்பின் உடலில் இரிடியம் அல்லது ஒருவிதமான காந்த சக்தி இருக்கிறது என்று கதைவிட்டு லட்சங்களை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மண்ணுளி பாம்பை கடத்திய கும்பலை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ரூ.50 லட்சத்துக்கு விற்க திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சதுரங்க வேட்டை படத்தில் நடிகர் நட்டி, மண்ணுளி பாம்பை வியாபாரி தலையில் கட்டி, கோடிகளில் பணம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ஏமாற்றுவார். பாம்பு பேசும்.. பாம்புக்கு ஆயிரம் மொழிகள் தெரியும் என்று கதை அளப்பார். அதனை நம்பி வாங்கும் செட்டியார் (அந்த படத்தில் வரும் கேரக்டர்), மகன் கடைசியாக சொன்ன பிறகு ஏமாந்தது தெரியும். அந்த பாம்பிற்கு கூட இளையதளபதி விஜய் என்று கூட பெயர் வைப்பார்கள்.. அந்த காட்சி உலக அளவில் பேமஸ் ஆன காட்சியாக இன்று வரை இருக்கிறது.

snake vellore

காந்த சக்தி

அதை பார்த்து விழிப்புணர்வு அடைய வேண்டிய மக்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனெனில் மண்ணுளி பாம்பின் உடலில் இரிடியம் அல்லது ஒருவிதமான காந்த சக்தி இருக்கிறது என்று கடத்தல்காரர்கள் வதந்தி பரப்பி உள்ளார்கள். எப்படி 10 ரூபாய் காயின் செல்லாது என்று வதந்தி பரப்பினார்களோ அதுபோல் தான் இதுவும். ஆனால் அந்த வதந்தியை கூட மக்கள் ஒரு கட்டத்தில் நிராகரித்துவிட்டார்கள். ஆனால் மண்ணுளி பாம்பு வதந்தியை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கவில்லை. காரணம் தெய்வீக நம்பிக்கையை கலந்து மூடநம்பிக்கையை விதைத்துள்ளார்கள்.


புதையல்

ஏனெனில் மண்ணுளி பாம்பு இருக்கும் இடத்தில் தங்கம் அல்லது புதையல் இருக்கும் என்றும், அந்தப் பாம்பு புதையல் இருக்கும் திசையைத் தலையை அசைத்துக் காட்டும் என்றும் ஒரு குருட்டு நம்பிக்கை கிராமப்புறங்களில் இன்றும் நிலவுகிறது. இதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும், குறிப்பாக எய்ட்ஸ் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் என்று வதந்திகள் உள்ளன. மேலும் ஆண்மை குறைபாட்டிற்கு இது ஒரு சிறந்த மருந்து என்ற பொய்யான நம்பிக்கையினால், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இது கடத்தப்படுகிறது. நம்நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்த வதந்தியை நம்புவோர் மிகஅதிகம்.


இரண்டு தலை

அதேபோல் மண்ணுளி பாம்பின் வால் பகுதி தலையைப் போலவே உருண்டையாக இருக்கும். இதைப் பார்க்கும் மக்கள் இதற்கு "இரண்டு தலை" இருப்பதாக நம்புகிறார்கள். இந்த அபூர்வப் பாம்பை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்று மாந்திரீகவாதிகள் மக்களை நம்ப வைத்துவிடுவார்கள்.இதுவும் ஏமாற காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதிக்கு மண்ணுளி பாம்பை கடத்தி விற்பனை செய்ய வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


விரைந்த வனத்துறை

இதனைத் தொடர்ந்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். அந்த நபர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதாவது அந்த ஆசாமிகளின் செல்போன் நம்பரை வாங்கி மண்ணுளி பாம்பை விலைக்கு வாங்குவது போல் நடித்து பேரம் பேசினர். அதன்படி வனத்துறையினர் வீசிய வலையில் அந்த கும்பலும் சிக்கியது.

50 லட்சம் மதிப்பு

அதன்படி, ரூ.50 லட்சத்திற்கு வாங்கி கொள்வதாக உறுதி அளித்தனர். மேலும் யாருக்கும் தெரியாமல், குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு வனத்துறையினர் தெரிவிக்க, இந்த பேச்சை நம்பி சென்ற 5 பேர் கும்பல் மண்ணுளி பாம்புடன் வந்தனர். இதனை கவனித்த வனத்துறையினர் மடக்கி பிடித்து மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்தார்கள்.

ஐந்து பேர் கைது

பிறகு நடத்திய விசாரணையில், மண்ணுளி பாம்பை கடத்தியவர்கள் கொல்லம் தட்டு மலையை சேர்ந்த சலாம் (வயது 50), வாக்கநாடு நிசாருதீன் (42), கோட்டயத்தை சேர்ந்த செரியான் (62), சாத்தனூரை சேர்ந்த பியாஸ் (53) மற்றும் கடைக்கல் நவுபல் ஆகியோர் என்பதும், தமிழ்நாடு வேலூரில் இருந்து ரூ.3 லட்சம் கொடுத்து ஒருவரிடம் விலைக்கு வாங்கி வந்ததும் அம்பலமானது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருந்து மண்ணுளி விற்பனை செய்தவர்கள் யாரென்று விசாரணை நடநதுவருகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+