தேதியை குறிச்சுக்கோங்க.. ஹாயா போகலாம்! தேனி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மதுரை எம்பி சு.வெங்கடேசன்
தேனி: சென்னை - போடி இடையேயான புதிய ரயில் சேவை எப்போது தொடங்கும் என்று மதுரை, தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த சேவை எதிர்வரும் 15ம் தேதி தொடங்கும் என ரயில்வே துறை கூறியுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அநேகமாக ரயில் போக்குவரத்து இல்லாத ஒரே மாவட்டமாக தேனி மட்டுமே இருந்து வந்தது. மதுரையிலிருந்து தேனியை இணைக்கும் விதமாக ஏற்கெனவே மீட்டர்கேஜ் பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநிலத்தின் மற்ற பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்ட நிலையில், இது மட்டும் மீட்டர்கேஜ் பாதையாக இருந்து வந்தது. இதனையடுத்து இந்த பாதையையும் விரிவுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை தேனி இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நான்கு கட்டமாக இந்த பாதை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டத்தில் மதுரை-உசிலம்பட்டி, அடுத்து உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி, மூன்றாவதாக ஆண்டிப்பட்டி-தேனி மற்றும் இறுதியாக தேனி-போடி என பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மூன்று கட்டம் வரை அதாவது மதுரை முதல் தேனி வரை முழுவதும் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த மே முதல் ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 4 ஆயிரம் நாட்களுக்கு பின்னர் தங்கள் ஊருக்கு ரயில் வருவதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து, பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனையடுத்து, தேனி-போடி இடையயோன ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகளும் சீரான வேகத்தில் நடைபெற்று வந்தன.
இதனையடுத்து இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மதுரை-போடி வரை ரயில் எப்போது இயக்கப்படும் என்கிற கேள்வியும் எழுந்தது. இந்த வழித்தடத்தில் ஜனவரி மாதம் ரயில் இய்யக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி மதுரை - போடி ரயில் காலை 8.05 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் புறப்பட்டு மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அருகே வடபழஞ்சி நிறுத்தம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி சென்று தேனிக்குக் காலை 9.35 மணிக்கு வந்து அங்கிருந்து காலை 10.30 மணிக்கு போடி சென்றடையும். இதேபோல போடியில் 5.50 மணிக்குப் புறப்படும் ரயில் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரை ரயில் நிலையத்திற்கு இரவு 7.50 மணிக்கு வந்து சேரும்.

இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இதை விட பெரிய எதிர்பார்ப்பு ஒன்று தேனி மக்களிடையே இருந்தது. சென்னை-தேனி ரயில் சேவைதான் அது. இந்த சேவை, பிப்ரவரி 19ம் தேதி முதல் வாரத்தில் மூன்று நாட்கள் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டன. அதாவது திங்கள், புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில் ரயில் இயக்கப்படும். ஆனால் திட்டமிட்டபடி ரயில் இயக்கப்படவில்லை. எனவே, ஜூன் 15ம் தேதி முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த ரயில் சேவையை, மத்திய அமைச்சர் தொடங்கி வைப்பதாகவும், ஆனால் போதிய தேதி இல்லாததால் ரயில் சேவை இயக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது. இது குறித்து சமீபத்தில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியிருந்தார். இதனையடுத்து இம்மாதம் 15ம் தேதி ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக எம்பி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
"அமைச்சரின் தேதிக்காக எவ்வளவு நாள் காத்திருப்பது?" என்று கடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி போடி - சென்னை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று குருவாயூர் Exp, கச்சிகுடா Exp இரண்டும் கொடை ரோடு நிலையத்தில் நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்திற்கும் எனது நன்றி" என்று கூறியுள்ளார். ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு மதுரை, தேனி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications