தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் சீமான் மாடு மேய்க்கும் போராட்டம்! கால்நடைகளுடன் மலையேறிய நாதக
தேனி: தேனி மாவட்டம் போடியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காவல் துறையின் அனுமதியை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாடு மேய்க்கும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி இந்த போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையிலும் தடையை மீறி சீமான் போராட்டம் நடத்தி வருகிறார்.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை பெற்றுத் தரக் கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஏராளமான மாடுகளுடன் நாம் தமிழர் கட்சியின் சீமான் அடப்பாறை மலை பகுதியில் நுழைந்தார். அங்கு நடந்தபடியே சென்றுக் கொண்டிருக்கிறார்.
அப்போது சீமான் பேசுகையில், இலங்கையில் எங்களை (தமிழர்கள்) குண்டு போட்டு கொன்றார்கள். அது இனப்படுகொலை. இங்கு குடிக்க வைத்து கொல்கிறார்கள். இதுவும் இனப்படுகொலைதான். இந்த நாட்டை உலகின் தலை சிறந்த நாடாக பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம்.
5 ஆண்டுகளில் ஆக சிறந்த நாடாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள் எல்லாம் கோடி கனவுகள் கொண்டோம். அதன நிறைவேற்ற கூடி வாருங்கள், ஓடி வாருங்கள் என் மக்களே, அவர்களுக்கு தெரியாது. ஆடு, மாடு என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ,
ஆடு மாடுகள் மேய்ப்பது தொழில்முறை அல்ல, எங்களது வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு ஆகும். மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள், கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன. மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை, ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி, மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனராம். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதனை கண்டித்துத்தான் சீமான் போராட்டம் நடத்தி வருகிறார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications