தெய்வத்துக்கே கேட்டிடுச்சு.. தேங்காய் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட்
தேனி: தேங்காய் விவசாயிகள் இப்படி ஒரு விலை உயர்வை இது நாள் வரை பார்த்து நான்கு வருடம் ஆகிவிட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தேங்காய் விலை கடுமையாக உயந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தக்காளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை பயிரிட்ட விவசாயிளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பீன்ஸ் பயிரிட்ட விவசாயிகள் தான் மிகப்பெரிய லாபம் ஈட்டி உள்ளனர்.
பொதுமக்களின் சமையல் பயன்பாட்டில், தினம் தோறும் இருக்கும் இரண்டு பொருள் என்றால், தக்காளி, தேங்காய். இந்த இரண்டுமே தற்போது பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தேங்காய் விலை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. பொதுவாக தேங்காய் விலை ஒரே சீராகத்தான் இருக்கும். எப்போதாவது ஒரு முறை தான் விலை ஏற்றம் ஏற்படும், பிறகு, காய்கள் வரத்து அதிகரித்து தானாகவே விலை குறையத் தொடங்கிவிடும்.

ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேங்காய் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் டன் ஒன்றுக்கு ரூ.28 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.70 ஆயிரம் என ஒன்றரை மடங்கு அளவிற்கு விலை கூடியிருக்கிறது. இதனால் சில்லறை விலையில் ஒரு காய் ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்வது என்றால், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதிகள், மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. 40 நாட்களுக்கு ஒருமுறை நிலையான வருமானம் கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் தென்னையையே விரும்பி சாகுபடி செய்கிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காத நிலையே நீடித்து வந்தது. மொத்த கொள்முதலில் ஒரு தேங்காய் விலை ரூ.8 முதல் ரூ.10 வரையே விற்பனையாகி வந்தது. இந்த விலை போதுமானதாக இல்லை என்றும், பராமரிப்பு செலவு மற்றும் கூலிக்கு கூட போதவில்லை என்றும் தென்னை விவசாயிகள் கண்ணீர் விட்டுவந்தனர்.
இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேங்காய் கொள்முதல் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு தேங்காய் கொள்முதல் விலையே ரூ.20ஆக உயர்ந்துள்ளது. இது தென்னை விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இதனிடையே தற்போது ஒரு தேங்காய் விலை ரூ.17-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளின் விலையேற்றத்தை ஒப்பிடும்போது தற்போதைய விலை இரட்டிப்பாக உள்ளதாக தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தேங்காய் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்றும் ஆனால் வரத்து அதிகமாக இருக்கும் போதும் இதே விலையேற்றம் இருந்ததால் அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
தற்போதைய நிலையில் தேங்காயின் தேவை அதிகம் இருப்பதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இருந்து தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வட மாநிலங்களுக்கு தேங்காய் தேவையை தமிழகம் தான் பெரிய அளவில் பூர்த்தி செய்து வருகிறது. தற்போது வரத்து குறைவுக்கு மத்தியில் வட மாநிலங்களில் தேங்காய் தேவையும் அதிகமாக உள்ளதால், அங்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, நல்ல மழை பெய்து மரங்களில் மீண்டும் காய் பிடித்து சந்தைக்கு வர குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை தேங்காய் விலை உயர்ந்தே இருக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.
இதனிடையே தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை அரசு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அந்த கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றினால், தமிழகத்தில் உள்ள விவசாயிளுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications