தேனி அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.. பெரியகுளத்தில் பதற்றம்
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் டாஸ்மாக் பார் உரிமையாளரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த இன்னொரு டாஸ்மாக் பார் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கிராமம் வடுகப்பட்டி. இங்குள்ள தேவர் தெருவை சேர்ந்த 45 வயதாகும் முருகன் என்பவர் ஜெயமங்கலத்தில் இருந்து குள்ளப்புரம் செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார்.

அதே வடுகப்பட்டி தேவர் தெருவை சேர்ந்தவர் பிரபுதேவா . இவருக்கு 35 வயது ஆகிறது. பிரபுதேவா தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பாரினை நடத்தி வருகிறார். உறவினர்களான முருகன் மற்றும் பிரபுதேவாஇடையே தொழிலில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மே 1ம் தேதி டாஸ்மாக் கடை விடுமுறையாகும். ஆனால் தேனி அருகே பின்னதேவன் பட்டியில் பிரபுதேவா நடத்தி வந்த டாஸ்மாக் பாரில் அரசு அனுமதி இன்றி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 900 மது பாட்டில்கள் இருந்தது. அதனை தேனி அல்லிநகரம் போலீசார் சோதனை செய்து கைப்பற்றினர். இந்நிலையில் மே 1ம் தேதி சட்டவிரோதமாக பாரில் மதுவிற்பனை செய்ததாக வடுகப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவரையும் அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்த தகவலை போலீசாருக்கு தனது உறவினரும் டாஸ்மாக் பார் உரிமையாளருமான முருகன் தெரிவித்ததாக சந்தேகப்பட்ட பிரபுதேவா, அவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு வடுகப்பட்டி கலையரங்கம் அருகே முருகனுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது ஆத்திரம் அடைந்த பிரபுதேவா, தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து டாஸ்மாக் பார் உரிமையாளரான முருகனை சரமாரியாக வெட்டினார். அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார். பின்னர் பிரபுதேவா அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனே தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..
அதன்பேரில் பெரியகுளம் டிஎஸ்ழு சூரக்குமாரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரபுதேவாவை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் வடுகப்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications