மக்களிடம் நல்லபடியா சேர்த்து விட்டோம்.. அதாவது சின்னத்தை.. வெற்றி எனக்கே.. தங்க தமிழ்ச்செல்வன்
தேனி மக்களவை தொகுதி தேர்தல் குறித்து தங்க தமிழ்செல்வன் பேசியுள்ளார்.
Recommended Video

தேனி: "நான் என்ன சொல்றேன்.. அவங்க எவ்ளோ பணம் கொடுத்தாலும் வாங்கிக்குங்க.. ஆனா ஓட்டை மட்டும் எனக்கு போட்டுடுங்க" என்று தொகுதி மக்களிடம் சொல்கிறார் தங்க தமிழ்செல்வன்!
தேனி தொகுதியில் இப்போதைக்கு பலத்த போட்டியே அமமுகவுக்கும், அதிமுகக்கும்தான்! ஓபிஎஸ் மகன் அதிமுக சார்பாகவும், தங்க தமிழ்செல்வன் அமமுக சார்பாகவும் களம் இறங்குகிறார்கள்.
மகன் ரவீந்திரநாத்துக்காக ஓபிஎஸ் குடும்பமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட நாளில் இருந்தே, "வீதிவீதியாக ஓபிஎஸ் பணம் கொட்டி கிடக்கிறது" என்றார் தங்க தமிழ்செல்வன்.

பிரச்சாரம்
இந்நிலையில், ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தில் பேசியபோது தங்கதமிழ்செல்வன் சொன்னதாவது: தேனி அதிமுக வேட்பாளருக்கு அரசியல் பக்குவமே இல்லை. அப்படித்தான் பேசி வருகிறார். எங்களை பார்த்து சுயேட்சை வேட்பாளர் என்று சொல்கிறார். ஆனால் இதுக்கெல்லாம் தேர்தல் முடிவில் பதிலடி தருவோம்.

பாதாளம் வரை..
ஓபிஎஸ் தன் மகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரூ.1000 கோடி வரை செலவு செய்ய பிளானில் இருக்கிறார். அதனால் பணம் பாதாளம் வரை பாய போகிறது. அதனால் நான் என்ன சொல்றேன், அவங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்குங்க. ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போட்டுடுங்க.

வேடிக்கை
நிறைய இடங்களில் தேர்தலில் வெற்றி பெற அதிமுகவினர் பணம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இதை தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள், போலீசார் யாருமே கண்டுக்கறது இல்லை.. வேடிக்கைதான் பாக்கறாங்க. இது சம்பந்தமாக புகார் கூட அளித்திருக்கிறோம்.

சாதகம்தான்
தேர்தல் ஆணையம் புதுசா எங்களுக்கு தந்த சின்னத்தை மக்களிடம் வெற்றிகரமாக சேர்த்து விட்டோம். அதனால் வெற்றி எங்களுக்கு சாதகமாகவே இருக்க போகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications