கஞ்சா போதை.. பாலியல் சீண்டல்.. தேனி சிறுமியை தீ வைத்து கொன்ற இளைஞன்.. அன்புமணி ராமதாஸ் இரங்கல்
தேனி: தேனி மாவட்டத்தில் இளைஞர் ஒருவார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நிலையில் அதை தடுக்க முயற்சித்த 7 வயது சிறுமிக்கு அந்த இளைஞர் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதக்காலம் ஆன நிலையில் தற்போது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் "பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பின்னணி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் கடந்த ஒரு மாத்திற்கு முன்னர் ஒரு கொடுமை அரங்கேறியது. தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயதி சிறுமியை 'விளையாடலாம் வா' என அழைத்த இளைஞன் ஒருவன் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதற்கு சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி சிறுமியின் உடைக்கு தீ வைத்துள்ளார்.

இடைக்கால நிவாரணம்
இதில் சிறுமி கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். 75% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு காரணமான இளைஞரை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயிரிக்கு போராடி வரும் சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

உயிரிழப்பு
ஆனால், சிகிச்சை பெற்றுவந்த சிறுமி தற்போது உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்ததால் கொடியவன் ஒருவனால் தீயிட்டு எரிக்கப்பட்ட 7 வயது சிறுமி, ஒரு மாத உயிர்ப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அறிக்கை
அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள். 7 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டலுக்கும், ஒரு மாதமாக துடிதுடித்து இப்போது உயிரிழந்திருப்பதற்கும் காரணம், அந்த சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்ததுதான். பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பழக்கம் முக்கிய காரணமாகும். பாலியல் குற்றங்களை செய்தால் தண்டனை பெறாமல் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் நிலவுவது தான் குற்றங்கள் பெருகுவதற்கு இன்னொரு காரணம் ஆகும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications