சர்க்கரையாய் பேசின தேனி ரேவதி.. உடனே சபலப்பட்டுட்ட ஜவுளி வியாபாரி.. என்னாது, 125 சவரன் தங்க நகைகளா?

Subscribe to Oneindia Tamil

தேனி: புது புது டிசைன்களில் தங்க நகைகளை பார்த்ததுமே சபலப்பட்ட ஜவுளி வியாபாரி, 125 பவுன் நகைகள் செய்ய ஆர்டர் தந்துள்ளார்.. இறுதியில் தேனியில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை அந்த பகுதிகளுக்கு ஏற்படுத்தி விட்டது. இது தொடர்பான விசாரணையும் நடக்கிறது.

கடந்த வாரம் தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் மோசடி சம்பவம் ஒன்று நடந்தது.. அரண்மனைப்புதூர் பசுமை நகரை சேர்ந்தவர் சுகந்தி... இவரது அப்பா பாஸ்கரன் மூலம், லட்சுமிபுரம் விஜயகுமார் என்பவர் சுகந்திக்கு அறிமுகமாகியிருக்கிறார்..

theni

சுகந்தியின் வீட்டை ரூ.63.66 லட்சத்திற்கு கிரையம் செய்து தருவதாக விஜயகுமார், அவரது மனைவி கோகிலா இருவருமே சுகந்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால், சுகந்தியும், அந்த பணத்தை வழங்கி கிரையம் செய்தார். ஆனால், ஆந்த வீட்டை தங்களது மகள் காவியாவிற்கு தானசெட்டில்மெண்டாக விஜயகுமார், கோகிலா தம்பதியினர் இருவரும் எழுதி தந்துள்ளனர்.

இதனால் அதிர்ந்துபோன சுகந்தி, 3 பேர் மீதும் எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில், இந்த மோசடிக்கு கோகிலா மூளையாக இருந்தது தெரியவந்து கைது செய்திருந்தார்கள்.

ஜவுளி வியாபாரி: இப்போது இன்னொரு மோசடியை மற்றொரு பெண் நடத்தியிருக்கிறார். ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்த 40 வயது பொறியியல் பட்டதாரி சுந்தர் என்பவர் ஜவுளிஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது கடையில், அதே பகுதியை சேர்ந்த ரேவதி(45), மகள்பூமிகா(25) இருவரும் கடந்த 4 வருடங்களாகவே, புடவைகளை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம், ஜவுளி ஓனர் சுந்தருக்கு, திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியைச் சேர்ந்த வீரன் என்பவரை, இந்த 2 பெண்களும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.. இதையடுத்து, நாளுக்கு நாள், சுந்தரிடம் நெருங்கி பழகிவிட்டார் வீரன்..

தங்க பிஸ்கெட்: ஒருநாள் சுந்தரிடம், மதுரையை சேர்ந்த வெற்றிவேல் என்பவரிடம் தங்க பிஸ்கெட் நிறைய இருப்பதாகவும், அதனை வாங்கி நாகபட்டினத்தை சேர்ந்த நகை ஆசாரியான பாலசுப்பிரமணியத்திடம் தந்து, புதிய டிசைன்களில் குறைவான விலைக்கு நகைகளை செய்து தருவதாகவும் சொல்லியிருக்கிறார். அத்துடன் தன்னுடைய செல்போனிலிருந்து, புதுபுது நகை டிசைன்களையும் சுந்தரிடம் காட்டியுள்ளார்.

இதைப்பார்த்து சபலப்பட்ட சுந்தர், 125 பவுன் நகை செய்ய வேண்டும் என்று சொல்லி, இதற்காக ரூ.74 லட்சத்து 75 ஆயிரத்தை பல தவணைகளில் ரேவதி, வெற்றிவேல், நகை ஆசாரி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு பேங்க் அக்கவுண்ட் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்.. ஆனால், கடைசிவரை 3 பேருமே நகைகளை செய்து தரவேயில்லையாம்.. பணத்தை கேட்டாலும், அவர்கள் தரவில்லையாம்.. அதனால், தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சுந்தர் புகார் தந்தார்..

அதிரடி கைது: இந்த புகாரின்பேரில் ரேவதி, பூமிகா, வீரன், வெற்றிவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுட்ன, ரேவதி, வீரன் இருவரையும் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+