அந்த சிலை உங்களிடம் பேசும்.. வீட்டில் வைத்தால் பணம் கொட்டும்.. தேனி சதுரங்க வேட்டை.. ஆண்டவரின் க்ளூ
தேனி: ஏமாறுபவர்கள் உள்ளவரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? தங்களிடம் உள்ள சாமி சிலைகள் பேசக்கூடியவை, அபூர்வமானவை என்று ஒரு கும்பல் சொல்லியிருக்கிறது.. அதை அதீத பக்தர் ஒருவர் நம்பியிருக்கிறார்.. தேனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தேனியை அடுத்துள்ள அரண்மனைபுதூரில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் சாலையில், ஒரு கார் நீண்ட நேரரமாகவே நின்று கொண்டிருந்தது.. இதனால், அந்த வழியாக ரோந்து சென்றபழனிசெட்டிபட்டி போலீசார், சந்தேகத்தின்பேரில், காருக்குள் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

சந்தேகம்: அப்போது 3 பேருமே உளறினார்கள்.. முன்னுக்கு பின் முரணான அவர்கள் பேசுவதால், மேலும் சந்தேகமடைந்த போலீசார், காரில் இருந்த பொருட்களை சோதனை நடத்தினார்கள்.. அப்போது 1 அடி உயரமுள்ள ஐம்பொன் சாமி சிலையும், பச்சை நிறத்தில் கற்களும் இருந்தன. இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இவர்கள் தங்களிடம் உள்ளதை, ஐம்பொன் சிலை மற்றும் மரகத கற்கள் என்று சொல்லி தேனியில் விற்பனை செய்வார்களாம்.. பழமையான தோற்றம் வரவேண்டும் என்பதற்காகவே, புத்தர் வடிவில் இருந்த இந்த சிலையை, இவர்களே தயாரித்துள்ளதும் தெரியவந்துள்ளது..
ஐஸ்வர்யம் பெருகும்: "தங்களிடம் உள்ள சாமி சிலைக்கு பூஜை செய்தால், அது உங்களிடம் பேசும்.. அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்" என்று, தொழிலதிபர்களிடம் சொல்லி ஏமாற்றி, பணம் பறித்துவிடுவார்களாம்.
அந்தவகையில், தேனியை சேர்ந்த ஆண்டவர் என்ற பக்தர், இப்படியொரு சிலை உள்ளதை கேள்விப்பட்டு, விலை கொடுத்து வாங்க ஆசைப்பட்டுள்ளார்.. அவரது பெயர் ஆண்டவர்.. தேனி சுக்குவாடன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் தெருவில் வசித்து வருகிறார்.,, இவர் கடவுள் பக்தி மிகுந்தவர் என்பதால், சுவாமி சிலைகளை வாங்க விரும்பியுள்ளார்.
மரகத கற்கள்: இவரிடம் டிரைவராக வேலைபார்த்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மூலம், மேற்படி நபர்களிடம் சாமி சிலை, மரகத கற்களை வாங்க முயன்றுள்ளார். இதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசி, 5 ஆயிரம் ரூபாய் முன்பணமும் தந்துள்ளார்.. ஆனால், திடீரென ஆண்டவருக்கு, அந்த கும்பல் மீது சந்தேகம் வந்துள்ளது.. அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லாததால், போலீசுக்கு தகவல் தந்துள்ளார் ஆண்டவர்.. இதையடுத்தே இந்த மொத்த கும்பலும் போலீசில் சிக்கியிருக்கிறது.
தற்போது, தங்கமணி, பாலமுருகன், சம்பழகு, டிரைவர் சிவா, ரவிந்திரன் சூரியபிரகாஷ் என 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோசடிக்கு பயன்படுத்திய சிலை, கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. இந்த கும்பல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அதேபோல, அந்த சிலை எந்த உலோகத்திலானது என்று மதுரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications