தேனியில் கண்ணதாசன் வீட்டில் ஒரே ஆச்சரியம்.. தோட்டத்தில் தொங்கிய 6 அடி முருங்கைக்காயை பார்த்தீங்களா?
தேனி: திண்டுக்கல் சின்னாளபட்டி அருகேயுள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள ஒட்டுரக முருங்கைச்செடியில், முருங்கைக்காய்கள், வழக்கத்தைவிட அதிக நீளமாக வளர்ந்து பலருக்கும் வியப்பை தந்திருந்த நிலையில், தேனியில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. இதனால் தேனி கண்ணதாசன் தோட்டத்தில் அப்படியென்ன விசேஷம் பாருங்க.. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சொல்வதென்ன?
3 வருடங்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே சக்கரபாணி என்பவர் தோட்டத்தில் 5 அடி நீளத்திற்கு முருங்கைக்காய் காய்த்திருந்தது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை தந்திருந்தது.. முருங்கைக்காய் நீளத்தை விட அதிகநீளம் கொண்டதாக இருக்கவும், அந்த பகுதி மக்கள் திரண்டு வந்த முருங்கைக்காயை பார்த்தனர்.

5 அடி நீளத்துக்கு முருங்கைக்காய்கள்
விவசாயி சக்கரபாணி இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் சொட்டுநீர் பாசன முறையில் கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அதிகம் விளைவித்து படைத்திருக்கிறார்.. எனினும்,ஒட்டுரக முருங்கை செடி நடவுசெய்தபோதுதான், ஒவ்வொரு முருங்கைக்காயும் 4 அடி மற்றும் 5 அடி நீளம் உள்ளவைகளாக இருந்தன. இப்படி காய்த்த முருங்கையை தினசரி 100 கிலோவிற்கு மேல் பறித்து விற்பனைக்கு அனுப்பி வைத்தவர் சக்கரபாணி..
ஆனால், சக்கரபாண்டியையே மிஞ்சிவிட்டார் தேனி கண்ணதாசன்.. கம்பத்தில், சுருளிப்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.. சுருளிப்பட்டி சாலையில் சொந்தமாக டீ கடையும் வைத்திருக்கிறார்.. போலீஸ் துறையிலிருந்து ரிடையர் ஆகி முடிந்ததுமே விவசாயத்தில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், தன்னுடைய வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் காய்கறி சாகுபடி செய்து வருகிறார்.
அதிலும் ரசாயன மருந்து தெளிக்காமல் இயற்கை முறையில் கத்திரிக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறி செடிகள், அத்தி, முருங்கை உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார்.
கண்ணதாசன் வீட்டில் புட்டு முருங்கை குச்சி
சில மாதங்களுக்கு முன்பு கண்ணதாசனுக்கு, அவரது நண்பர் ஒருவர் புட்டு முருங்கையின் 4 குச்சிகளை கொடுத்தார். அவற்றை கண்ணதாசன் காய்களை பறிக்காமல் விட்டார். மேலும் சில நாட்களில் முருங்கைக்காய்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடிக்கு நீளத்திற்கு நீளமாக காய்த்து தொங்க ஆரம்பித்துவிட்டன.
அதிலும் சில காய்கள் மரத்திலிருந்து, தரை வரை முட்டி தொங்குகிறதாம்.. சில காய்கள், தரையில் முட்டி மீண்டும் மேல்நோக்கி சுருண்டு வளர்ந்து வருகிறதாம்..
இந்த முருங்கைக்காய்களை கண்ணதாசன் தினமும் பறித்து வந்து, தன்னுடைய டீக்கடையில் தொங்கவிட்டு வருகிறார்.. சாலையில் செல்லும் பொதுமக்கள் இந்த நீளமான முருங்கைக்காய்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.. சிலர் ஆர்வத்துடன் வந்து விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.. மேலும் சிலர் செல்போனில் போட்டோ எடுத்து செல்கின்றனர்.
ஒட்டு முருங்கை - யாழ்ப்பாண முருங்கை
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, பொதுவாக ரகத்திற்கு தகுந்தாற்போல் முருங்கை மரத்தில் 50 செ.மீ. முதல் 126 செ.மீ. நீளத்துக்கு முருங்கைக்காய்கள் வளரும் என்றாலும், நாட்டு முருங்கைக்காய் இந்த அளவு நீளத்துக்கு வராது.
தேனியில் கண்ணதாசனின் தோட்டத்தில் முருங்கை மரம், ஒட்டுவகையை சேர்ந்ததாக இருக்கலாம்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் விவசாயி ஒருவர், யாழ்பாண முருங்கை என்று ஒட்டு முருங்கையை சாகுபடி செய்தார். அந்த மரங்களில் சுமார் 5 அடி நீளமான முருங்கைக்காய்கள் காய்த்திருந்தன.. அதனால் கண்ணதாசன் தோட்டத்தில் வளர்ந்த முருங்கை மரத்தை பார்வையிட்டு, அதன் ரகம் குறித்து ஆய்வு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications